பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

51

'பெண்மைக்குரிய எல்லா உயிர்ப் பண்புகளும் நிரம்பப் பெற்ற பெண்மணி' எங்கோ ஓரிடத்தில் இருக்கத்தான் வேண்டுமென்று நான் மனமார நம்புகிறேன். என்றேனும் ஒரு நாள் எதிர்பாராமல் அத்தகைய அணங்கைக் கண்டு நான் வியப்படைய நேரும் என்றும் எண்ணுகிறேன். ஆனாலும் என்போன்ற ஓர் ஏழைக்கு அவள் கட்டாயம் எட்டாத் தொலைவில் தான் இருப்பாள். அத்தகைய நிறை நங்கையை நான் தனிப்பட ஒதுக்கி என் வகுப்பு முறையில் அவளைச் சேர்க்காமல் விட்டதன் காரணம் இதுவே.

‘அத்தகைய நிறை அணங்கைக் கற்பனை செய்து பாராமல் என்னால் இருக்க முடியவில்லை.

'பாதி இடிந்து பொடிந்து தகர்ந்தும், பாதி செடி கொடிகள் படர்ந்து மூடப்பெற்றும் உள்ள ஓர் அகன்ற வாயில்!’ அதனின்று தொலை தூரத்தில், அதற்குரிய மாளிகை என்று எவரும் கனவில் கூடக் கருத முடியாத உருவில் பாழ்பட்டுக் கிடக்கும் இடிபாடுகள்! அவற்றிடையே ஓர் உள்ளறையிலே எவரும் காண முடியாத ஓர் அழகாரணங்கு அடைபட்டுக் கிடப்பதாக வைத்து கொள்வோம்! எவ்வளவு வியப்பார்வத் துடன் அக்காட்சியைப் பாராட்டுவோம் எவ்வளவு குதூகலத்துடன் அந்த அழகுக் கருவூலத்தைக் கண்டு பிடித்து விட்டது பற்றிக் கூத்தாடுவோம்! அக்காட்சியின் மலைப்பிலும் திகைப்பிலும் நம் கோட்பாடுகளையும் வகுப்பு தொகுப்புப் பாகுபாடுகளையும் எப்படி நாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு, அதன் எதிர்பாராத, புதுமை வாய்ந்த மாயக் கவர்ச்சியில் இழைந்து செயலற்றவர்களாக நிற்போம்!

'அவள் சூழல்களை எல்லாம் என் கற்பனை யுள்ளம் படைத்துருவாக்கிக் காண விரும்புகிறது.'

‘அவள் தந்தை ஒரு முரடன். கரடு முரடான தோற்றம் உடையவன். அவள் தமயன் பார்வைக்கே அருவருப்பானவன். முற்றிலும் சுடு மூஞ்சி. அவர்களிடையிலே, மிகச் சாதாரணமான படுக்கை யறையிலே அடைபட்டுக் கிடக்கிறாள், அம்மாய அணங்கு. இச்சூழ் நிலைகளில், உலகத்தினின்று துண்டுபட்டுப் பூட்டி வைக்கப்பட்ட நிலையில், அவள் உணர்ச்சிகளும் விசித்திரமாகவே இருப்பது உறுதி. மற்றப் பெண்களுக்கு மிக