பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

53

போதிய தகுதி உடையவளாக மாட்டாள். இவ்வாறு அவனை அருகே இருந்து கண்ணுற்ற அவ்விருவரும் எண்ணினர்.

இளவரசன் துயிலால் உரையாடல் நெடிது தடைபடாமல் மேலும் தொடர்ந்தது. பல ஆட்கள், செய்திகள் பற்றிய வாதம் எழுந்தது. முழுநிறைவு என்பது எந்தத் துறையிலும் காணுதற்குரிய ஒரு பண்பு என்று உமா நோ கமி வலியுறுத்திப் பேசினான். பெண்கள் வகையில் அது இன்னும் அரிது என்று வாதித்தான்.

‘தன் அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பதில் அரசனுக்கு ஏற்படும் இக்கட்டு சிறிதன்று. ஆனால், தன் வாழ்க்கைத் துணைவியைத் தேர்ந்தெடுக்கும் கணவனின் பொறுப்பு அவ்வரசன் பொறுப்பை ஒரு தூசாக்கி விடுகிறது. ஏனெனில் அரசன் தன் வேலைகள் அத்தனையையும் ஒருவனிடமே ஒப்படைக்கத் தேவையில்லை - ஒருவர், இருவர், ஒருசிலரிடம் கூட ஒப்படைக்கவேண்டியதில்லை - உச்ச உயர் படியிலிருந்து கடைசிக் கீழ்ப்படி வரை எத்தனையோ படிகளில் எத்தனையோ வகைப் பணியாட்களின் மொத்தப் பெருந்தொகுதியிடமே அவற்றை ஒப்படைக்கிறான். ஆனால், கணவன் தன் குடும்பத்தில் அத்தனை வேலைகளுக்கும் பொறுப்பாக ஒரே ஒரு ஆளை ஒரு வாழ்க்கைத் துணைவியை -தேர்ந்தெடுக்க வேண்டியவன் ஆகிறான்.

'வீட்டுத் தலைவி வெவ்வேறுபட்ட பல்வகைப் பண்புகளையும் ஒருங்கே தன்னிடம் கொண்டவளாயிருத்தல் வேண்டும். அதே சமயம் இத்தேர்வு மிகக் கண்டிப்பாய் இருப்பதற்கும் வழியில்லை. எடுத்துக்காட்டாக, நாம் தேர்ந்தெடுக்கும் அணங்கினிடம் நாம் ஆர்வமாக நாடும் சில அனுபவபூர்வமான பண்புகள் இருப்பதாக வைத்துக் கொள் வோம். தேர்வுக்குப் பின் இவற்றுக்கு புறம்பே நம் முழுநிறை குறிக்கோளை நோக்க அவள் குறைபடுவதாகக் காணப்பட்டால், நாம் பொறுதி இழந்துவிடக் கூடாது. காதல் கூடும் வேளையில் நாம் அவளைத் தேர்ந்தெடுக்க உதவிய அந்த முதற் பண்புகளை நாம் மறந்துவிடாமல் மனத்தில் கொள்ள வேண்டும். அவற்றையே முதன்மையாகக் கொண்டு அவற்றில் மன நிறைவடையவேண்டும்.