பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




56

அப்பாத்துரையம் - 22

மொத்தத்தில் நான் மேலே காட்டியபடி குடிப்பிறப்பு, அழகு ஆகிய இரண்டு பண்புகளையும் போதாதவை என்று தூக்கி எறிந்து விடலாம். நாம் விரும்பி மேற்கொள்ளும் பெண்மணி எளியவளாய் இருக்கட்டும். சூதுவாதற்றவளாகவும் இருக்கட்டும். ஆனால், அவள் நேர்மையுடையவளாகவும் அமைதியான குணம் உடையவளாகவும் இருத்தலே சால்பு. அப்போதுதான் மொத்தத்தில் அவள் மீது நாம் சுமத்தும் பொறுப்பை அவள் மீறாதவளாய் இருப்பாள். இவையன்றிக் கூடுதலாக வேறு நற்பண்புகளும் அவளிடம் இருக்குமேயானால் தெய்வச் செயலாகக் கிடைத்த பொன் மலரின் மணம் போல, அவற்றை நாம் அருமையாகக் கொண்டாட வேண்டியதே. அதே சமயம் இவற்றோடு சிறு குறைகள், பிழைபாடுகள் இருக்க நேர்ந்தால் கூட அவற்றை நாம் மிக நுணுகி ஆராய்ந்து கணித்தல் கூடாது.

'அத்துடன், பொறுப்புத் தன்மையும் பாசமும் இருக்கும் இடத்தில் வெளித் தோற்றம் கூட மிக மோசமானதாய் இருக்க முடியாது என்று நாம் உறுதியாக நம்பலாம்.'

'பொறுக்கும் பண்பிலேயே எல்லை மீறிச் செல்பவர்களும் உண்டு. தமக்குத் தீங்குகள் இழைக்கப்படும்போது, கண்டிப்புடன் எதிர்த்தே பெண்டிர் அவற்றைத் திருத்தித் தம்மைத் தற்காத்துக் கொள்ளமுடியும். ஆனால், மேலே குறிப்பிட்டவர்களில் பலர் அத்தீங்குகளைக் கண்டும் காணாதது போல் பொறுமையின் திருவுருவமாக இருந்து விடுவார்கள். பலசமயம் அவர்கள் பொறுமையின் ஒளிகுன்றா உயர் விளக்குகளாகக் கூட திகழ் வார்கள். ஆயினும், திடீரென ஒருநாள் எதிர்பாராத வேளையில் அவர்கள் தம் பொறுமையின் எல்லைக் கோட்டை அடைந்து விடுவதுண்டு. அப்போது அவர்கள் வாய் திறவாமல் ஓர் அழகிய பாடலை எழுதி வைத்துவிட்டு எங்கோ மறைந்து விடுவார்கள். அவர்கள் பாடல் வாசிப்பவர் உள்ளத்தில் இரக்கம் உண்டு பண்ணத்தக்க மொழியில் அமைந்திருக்கும். அவர்கள் அன்புக்குரியர் உள்ளத்திலோ அது கடுந்துயரையும் கழி விரக்கத்தையும் எழுப்பிக் கொந்தளிப்பு ஊட்டும். இவ் வுணர்ச்சிகளைத் தம் பழைய வாழ்வின் சூழலில் பரப்பிவிட்டு, அவர்கள் மலைகள் பல கடந்த ஒரு சிற்றூரிலோ, கடற்

வ்