பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

57

கரையோரத்தில் உள்ள ஒரு சிறு குடியிலோ சென்று தம் வாழ்நாளைப் பாழ்நாளாகக் கழிப்பார்கள். அதே சமயம் அவள் காதல் துணைவனும் அவளை எங்கெங்கும் தேடித் தடங் காணாமல் இன்னொரு திசையில் மனமாழ்குவான்.

'நான் சிறுவனாயிருந்த சமயம் அரண்மனைப் பெண்டிர் இதுபோன்ற துயரார்ந்த கதைகள் பல கூறுவது வழக்கம். அவற்றில் ததும்பிய உணர்ச்சிகள் மெய்யானவையே என்பதை நான் ஒருபோதும் ஐயுற்றதில்லை. அவ்வுணர்ச்சிகளில் தோய்ந்து நான் கண்ணீரை ஆறாகப் பெருக்கியுமிருக்கிறேன். ஆயினும் அக்கதைகளிடையே காணப்பட்ட துயர உணர்ச்சிகள் பெரிதும் நடிப்புணர்ச்சிகளே என்று நான் இப்போது சந்தேகப்படத் தொடங்கியிருக்கிறேன்.'

'எடுத்துக்காட்டாக, நம் கற்பனைக்குரிய நங்கை மேற்கூறியபடி தன் கணவனைக் கைவிட்டுச் சென்றிருந்தாள் என்று வைத்துக் கொள்வோம். கணவனும் அவளிடம் மாறாப்பாசமுடையவனாகவே துடிக்கிறான். ஆனால், அவனை இத்தனை துன்பங்களுக்கும் ஆளாக்கிவிட்டு அவள் தானும் தாங்கமுடியாது துயரத்தில் ஆழ்கிறாள்! அவன் பாசத்தைக் கடுஞ் சோதனைக்குள்ளாக்க எண்ணி, அதன் பயனாக அவள் விளைவித்த விசித்திர நிலையே இது எனலாம்.

‘அவள் போக்கை ஆர்வமாகப் பாராட்டும் ஒரு தோழமை அணங்கு அவளைக் காண வருகிறாள். "ஆ, என்ன ஒப்பற்ற இதயம்! எத்தகைய ஆழ்ந்த உணர்ச்சி!” என்று அவள் நிலையைப் புகழ்ந்து வருணிக்கிறாள்.

'அணங்கின் நடிப்பை இது இன்னும் ஒருபடி ஏற்றி உச்சநிலைக்கு உயர்த்தி விடுகிறது. கணவனிடமிருந்து பின்னும் எட்டாத் தொலை வரை செல்லும் எண்ணத்துடன் அவள் இறுதியில் துறவியர் கன்னி மாடம் புக முனைகிறாள்.

ல்

'இம்முடிவுக்கு அவள் வந்த சமயம், அவள் மனப்பூர்வ மாகவே அப்புது வாழ்வில் நுழையத் துணிந் திருக்கக்கூடும், அதிலிருந்து திரும்ப வெளிவர வேண்டுமென்ற அவாவின் நிழல்கூட இருந்திருக்க மாட்டாது. ஆனால், இப்போது மற்றோர் ஆர்வ அணங்கு அவள் புதுப்போக்குப் பற்றிக் கேள்விப்