பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




58

அப்பாத்துரையம் - 22

படுகிறாள். "அந்தோ, பாவம்! இந்த அளவுக்கு அவள் செல்ல நேர்ந்ததென்றால், அதற்கு முன் அவள் என்ன பாடுபட்டிருக்க வேண்டும்? எத்தனை வேதனைகளைத் தாங் கியிருக்க வேண்டும்?" என்று இரங்குகிறாள். அவள் உணர்ச் சிகளுக்குப் புது விளக்கம் தருகிறாள். கன்னி மாடத்துக்குள்ளேயே சென்று இவற்றை அவள் வெளியிடுகிறாள்.

அவளுக்காக ஏற்கெனவே மனம் வெம்பி வெதும்பிக் கொண்டிருந்தவன், அவள் கணவன். அவள் துறவு நங்கையர் மாடம் புகுந்தது கேட்டு அவன் கண்ணீர் விட்டுக் கதறி அழுகிறான். அது கண்டு அவன் பணியாளோ, செவிலியோ, வேறு ஆர்வ நண்பரோ கன்னி மாடத்துக்கு ஓடோடிச் சென்று கணவன் கையிழந்த நிலை பற்றி அலறி அடித்துக் கொண்டு புலம்புவர்."என்ன காரியம் செய்துவிட்டாய், அம்மணி! என்ன காரியம் செய்துவிட்டாய்!" என்று அவளைக் குத்திப் பேசுவர். இப்போது அவளும் மனம்முற்றிலும் நைந்து, தான் தற்போது இருக்குமிடமும் நிலையும் மறந்து அழத் தொடங்குகிறாள். அது மட்டுமோ! பெண்டிரின் வழக்கப்படி மன வேதனையிடையே தன் தலைமயிரைப் பிய்த்துக் கொள்ள எண்ணிக் கைகளைத் தலைக்குக் கொண்டு செல்கிறாள் - அந்தோ! துறவியான சமயம் மொட்டையடித்துத் தலையை மழுக்கலாக்கியது அப்போதே அவளுக்கு நினைவுக்கு வருகிறது!

'இப்போது அவள் கண்கள் தங்கு தடையின்றி நீர் பெருக்குகின்றன. முன்னிலும் இரங்கத்தக்க நிலையில் ஆறு தலின்றி அவள் மண்ணில் விழுந்து புரள்கிறாள்.

'அணங்கின் வாழ்வு இப்போது எல்லா வகையிலும் சீர்கெட்டழிந்து விடுகின்றது. துறவிலேயே நாட்டம் செலுத்தி மனத்தில் உறுதி வேண்டி அவள் ஓயாது வணக்க வழிபாடாற் றலாம். ஆனால், ஒவ்வொரு கணமும் இதே நிலையில் அவள் போக்க முடியாது உள்ளத்தில் தளர்ச்சி ஏற்பட்ட சமயம், தான் துறவியானதற்காக அவள் வருந்தாமலிருக்க முடிவதில்லை' இந்தப் பாவ எண்ணம் தோன்றுந்தோறும், துறவியானதற்கு முன்னிருந்த அவள் நிலையைவிட அவளைப் பெரும் பாவியாகவே புத்த பகவான்கூட எண்ண முடியும், எண்ணி வெறுக்கவும் நேரும். இன்பம் கைவராமல், இன்பந்துய்க்கும்