பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

59

பாவிகளைவிட மோசமான பாவியாய் இரு உலக வாழ்விலும் கெட்டலைந்த அவளை அவள் எண்ணங்களே ஒரு நரகிலிருந்து மறுநரகுக்கு இட்டுச் செல்லும்.

'அணங்கு, அவள் கணவன் ஆகிய இருவரின் முற் பிறப்புக் குரிய நல்வினைகள் தலையிட்டால், துறவுக்கு உரிய முடிவான உறுதியை அணங்கு மேற்கொள்ளும் முன்பே அவளை அவள் கணவன் கண்டு மீட்க வழி ஏற்படலாம். ஆனால், அப்படிப்பட்ட நிலையிலும், அதன் பின்னாவது முன்னைய உணர்ச்சிக் கேடுகளுக்கு அவள் மேலும் வழிவிடாதிருந்தால்தான், அவர்களுக்கு வாழ்வு உண்டு. கணவனிடம் தவறு கண்டாலும், கண்ணை மூடிக்கொண்டு பொறுதியுடன் அவனோடு வாழ்வதென அவள் உறுதி கொண்டாலல்லாமல் இது

கூடிவராது.

'இன்னும் வேறு ஒருவகைப் பெண்டிர் இருக்கிறார்கள் - அவர்கள் தம் அன்புக்கும் தம் கணவர் பாசத்துக்கும் தாமே கண் விழித்துக் காவல் காக்கும் திருப்பணியை மேற்கொண்டு விடுகிறார்கள். இத்தகைய அணங்கு கணவனிடம் நேரிடையாக ஒரு குற்றத்தைக் காண வேண்டுமென்பதுகூடக் கிடையாது. குற்றத்தின் நிழல் இருக்கும் பக்கம் அவன் திரும்பியதாக அவள் எண்ணினால் போதும் உடனே அவள் முதல்தர நாடகக் காட்சிக்குத் தன்னைக் கச்சை கட்டிக் கொண்டு விடுவாள். இத்தகைய கணவனுடன் இனி ஒரு கணமும் வாழ முடியாது என்று கடுஞ் சீற்றத்துடன் கூறிக் கிளர்ந்ததெழுந்து விடுவாள்.

-

'மனிதன் அரைகுறை நைப்பாசைகள் அவ்வப்போது அவனைத் தவறான வழியில் செலுத்தினாலும், பெரும்பாலும் அவன் முதல் பாசமே அடிப்படை வலுவுடையதாய், இறுதியில் அவனைத் தன் பழைய சூழல்களுக்கே இழுக்கும் தன்மை யுடையதாகும் என்னலாம். ஆனால், மேற்கூறிய நங்கை தன் தகிடுதத்தங்களால் அந்தப் பாசத்தில் பிளவு ஏற்படுத்தி, அது திரும்பப் பொருந்த முடியாதபடி செய்தவளாகிறாள். நேர்மாறாக, சிலர் சிறு கண்டனத்துக்குரிய சிறு பிழை நேரும்போது அதை, காணாமலில்லை என்ற குறிப்புடன் ஒரு கண்ணோட்டத்தால் மட்டும் காட்டி யமைகின்றனர். தனிக் கண்டனத்துக்குரிய பெரும் பிழை கண்டவிடத்திலும் அவள்

தான்