பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




62

||--

அப்பாத்துரையம் - 22

நோக்கமாகக் குறிக்கொண்டவர்களே. ஒருவன் ஹோராய் மலைகளைத் தீட்டிக் காட்டுகிறான். மற்றொருவன் புயல் மீது மிதக்கும் புயலுருவாக ஒரு 'கடல் மா' உருவாக்குகிறான். மூன்றாவது ஒருவன் கடல் கடந்த மாநிலத்துக்கு உரிய கொடு விலங்கொன்றைச் சித்திரிக்கிறான். அல்லது கற்பனாகாரமான பூத வேதாளங்களைப் புனைந்துருவாக்குகிறான். கற்பனைத் திறனைத் தங்கு தடையின்றி ஓடவிடும் இக்கலைஞர்கள் குறிக்கோள் வெறும் அழகன்று. காண்பவர் கண்பார்வையைப் பிணித்து அவர்கள் உள்ளத்தை ஈர்த்து வைக்கும் உணர்ச்சிப் பிழம்புகளையே அவர்கள் நாடுகின்றனர்.

'அவர்கள் படங்களில் எவையும் மெய்யுருக்களல்ல. ஆனால், எல்லாமே மெய் வாய்மையுடையவையே. இயல்பாகக் காட்சி தரும் குன்றங்கள், ஆறுகள் அப்படியே காணப்படு கின்றன -எங்கும் காணத்தக்க முறையில், இயல்பான வடிவமைதியுடைய மனைகள் தம் அழகு காட்டிப் பகட்டுகின்றன. இத்தகைய அமைந்த காட்சிகளைத் தீட்டுவதிலும்; சில சமயம் நன்கு பழக்கப்பட்ட வேலிகளின் மறுபுறம் உலக மக்கள் கண்களிலிருந்து மடக்கப்பட்டுக் கிடக்கும் காட்சிகளைத் திறந்து காட்டுவதிலும்; ஆரவார வாழ்விலிருந்து ஒதுங்கிய மேட்டு நிலத்தில் திண்ணிய மரப்பொதும்பர்களை உருவாக்கிப் புனைவதிலும்; இவையனைத் திலும் கோடுகள், கீற்றுகள், உருவமைதி, அளவமைதி ஆகிய வற்றில் தக்கபடி கவனம் செலுத்துவதிலும் கலை முதல்வர்களின் தேர்ந்த கைத்திறம் மிகுதி தேவைப்படுவது உறுதி - தேர்ச்சி பெறாதவர்கள் அவற்றில் ஆயிரம் வழுக்களுக்கு உள்ளாக நேரும்.'

‘கையெழுத்துக் கலையிலும் இதுபோலச் சிலர் தம் விரை வெழுத்தின் கோடுகளை இப்படியும் அப்படியுமாகக் கிறுக்கி, இவை கைத்திறத்தின் போக்குகள் என்று பிறர் நினைப்பார்கள் என்று எண்ணி மனப்பால் குடிப்பர். ஆனால் உண்மையான கையெழுத்தாண்மையின் கலைச் செப்பம் ஒவ்வொரு எழுத்திலுமே தன் செவ்வியையும் அமைதியையும் பொறித் துவிடும் தன்மையுடையது. முதற் பார்வையில் சில எழுத்துக்கள் அரை குறைகள் போலத் தோற்றக் கூடுமானாலும் படியேட்டுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் அவையே குறையற்றவை என்பது தெரிய வந்துவிடும்.'