பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




68

அப்பாத்துரையம் - 22

துளிகளைத் துடைத்து நீக்கிக் கொண்டு நான் அவள் வீட்டை நோக்கி நடந்தேன். என்நெஞ்சு என்னுள் அடித்துக் கொண்டது. ஆயினும் இவ்வளவு நாள் சென்ற பின் அவள் கோபம் கட்டாயம் ஆறியிருக்க வேண்டும் என்றே நான் நினைத்தேன்.

'அறையினுள்ளே விளக்கு மங்கலாக எரிந்து கொண்டி ருந்தது. ஆனால் அது சுவரை நோக்கியே திருப்பி வைக்கப் பட்டிருந்தது. திண்டு மெத்தைகளிட்டு ஒப்பனை செய்த ஒரு படுக்கையைச் சுற்றித் திரைகள் தொங்க விடப்பட்டிருந்தன. அதன் அருகே பெண்டிர் உள்ளாடைகள் காயப் போடப் பட்டிருந்தன. மொத்தத்தில் எக் காரணம் பற்றியோ, அவள் என்னை எதிர்பார்த்தே யிருந்ததாக எனக்கு அச்சமயம் தோற்றிற்று. அவ்வளவு நல்ல சூழ்நிலைகளுக்கிடையே அவளைக் காணவந்தது பற்றி நான் உள்ளூர மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டேன். ஆயினும் இதற்கெதிராக எதிர்பாரா வகையில், அவள் வீட்டில் இல்லை என்ற பதிலே எனக்குத் தரப்பட்டது.’

‘நான் பணிப் பெண்களிடம் விசாரித்தேன். அன்றிரவு தான் அவள் தன் பெற்றோர் வீடு சென்றாளென்றும் ஒரு சில பணிப் பெண்கள், வேலையாட்களை மட்டும் நான் வீட்டில் விட்டுச் சென்றாளென்றும் நான் அறிந்தேன், இப்போதுதான் என் அமைதியை ஏற்கெனவே குலைத்திருந்த ஒரு செய்தியில் என் கருத்துச் சென்றது. இது வரை அவள் எனக்கு ஒரு பாடலோ, கடிதமோ எழுதியனுப்பி என்னுடன் சமரசம் செய்து கொள்ள முயன்றதில்லை, என் மீது பொறுதியிழந்து, ஐயுறவு கொண்ட தாக அவள் நடித்ததெல்லாம் என்னை விட்டுச் செல்வதற்கான சூழ்ச்சிகள் தானோ? - இத் திடீர் எண்ணம் இப்போது என்னைச் சுட்டது. இந்த ஊகத்தை வலியுறுத்த வேறு சான்றுகள் எவையும் எனக்குத் தென்படா விட்டாலும், இந்த எண்ணமே எனக்குப் பெருத்த மனக்கசப்பை உண்டு பண்ணிற்று. நான் அவளிடம் என்உளம் திறந்து காட்ட எண்ணினேன்.

அவளை நான் நெடு நாள் சந்திக்காவிட்டாலும், அவளை நான் மறந்ததில்லை. என் வாழ்வை அவள் வாழ்வாகவே கருதி நான்அதற்கான திட்டமிட்டிருந்தேன். இதை நான் அவளுக்கு மெய்ப்பித்துக் காட்ட முனைந்தேன். அவள் ஆடைக்காக நான்