பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

69

மிக இனிய வண்ணச்சாயலுடைய ஒரு துணிவகையைத் தேர்ந்தெடுத்திருந்தேன். அதன் நிறமும் உயர்வும் அவள் கண் களைக் கவர்வனவாய் அமைந்திருந்தன. இதை இப்போது அவள்பால் அனுப்பினேன். எப்படியும் அவள் என்னை முற்றிலும் தன் நினைவிலிருந்து அகற்றியிருக்க முடியாது' என்று நான் எனக்கே தேறுதல் கூறிக் கொண்டேன்.

துணிவகையை அவள் கண்ட பின் அவள் எனக்கு எத்தகைய தடையும் கூறவில்லை. என்னிடமிருந்து ஒளிந்து கொள்ள முயலவும் இல்லை. என் கேள்விகளுக்கெல்லாம் அவள் அமைதியாகவும் இன் முகத்துடனும் மறுமொழி கூறினாள். தன் நிலைபற்றி அவள் எத்தகைய வெட்கமோ மனத் தயக்கமோ கொள்ளவில்லை.'

'இறுதியில் எப்படியும் அவள் பேச்சில் பழய தொனியின் ஒரு சிறு சாயல் தென்பட்டது. "முன்போல நீங்கள் நடந்து காண்டால், என்னால் ஒருபோதும் பொறுத்துக்

கொள்ளமுடியாது. வாக்களித்தால், உங்களை மறுபடியும் ஏற்றுக் கொள்ளத் தடையில்லை” என்றாள். அவள் எண்ணம் இன்னும் உள்ளூர என்னை நாடிற்று என்று கண்டதால், அவளைப் பின்னும் சிறிது பயிற்றுவித்து ஆட்கொள்ளலாம் என்று நான் எண்ணினேன். என் பேச்சு இதற்கு ஏற்றதாக அமைந்தது. “இன்னும் அப்படி ஒன்றும் உறுதியாகக் கூற முடியாது. நான் விரும்புவது போலத்தான் வாழமுடியும். அச்சுதந்திரம் மட்டும் இன்னும் என்னிடமே இருக்கும்” என்று சொன்னேன்.

இனி அமைதியாக வாழ்வதாக

‘எங்கள் வாத எதிர்வாதங்கள் மீண்டும் முன்போலவே தொடர்ந்தன. ஆயினும் அன்று எனக்கு வெளிப்படத் தெரிந்ததைவிட அவள் உள்ளம் இதனால் உள்ளூரப் புண்பட்டு நைவுற்று வந்ததென்று இப்போது எண்ணுகின்றேன். ஏனெனில் ஒரு சில நாட்களுக்குள் அவள் உடல் நிலை படிப்படியாகத் தளர்வுற்றது. அவள் அதே கவலையாக உயிர் நீத்தாள். என் உணர்ச்சியற்ற நடத்தையை எண்ணி நான் மன நைந்து என்னையே பழிக்கும்படி செய்துவிட்டு, அவள் என்னை விட்டு நிலையாகப் பிரிந்து சென்றுவிட்டாள்.'