பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

அப்பாத்துரையம் - 22

-

'அவளிடம் என்னென்ன குற்றங்களிருந்தாலும், அவள் என்னிடம் கொண்ட மாறாப் பற்று ஒன்றே அவளை எனக்கு ஓர் ஒப்பற்ற மனைவியாக்கி இருக்குமென்று இப்போது நான் உணர்ந்தேன். சிறு பேச்சுகளிலும் சரி, மிக முக்கியமான செய்திகள் பற்றிய உயர் உரையாடலிலும் சரி ஒரு தடவைகூட, ஒரு கணம் கூட அவள் பேச்சுத் திறமை தளர்வுற்றதில்லை என்பதை நான் இப்போது எண்ணிப் பார்த்தேன். வண்ணப் பூ வேலைகளிலே அவள் முன்பனித் தெய்வதம் (தச்சுதாதேவி) தான்; இலையுதிர் காலத் தழைகுழைகள் மீது அத் தெய்வதம்கூட அவளைவிடத் திறம்படத் தன் மென்கரங்களால் சாயம் தோய்வித்திருக்க முடியாது! துன்னல் வேலையிலோ அவள் வானவர் நெசவாரணங்கான தனபதா தேவிதான்! இவற்றை நான் நினைந்து நினைந்து வருந்தினேன்.'

அவன் மேலே பேச முடியாமல் தயங்கினான். அவ் அணங்கின் பண்புகளையும் திறங்களையும் எண்ணி எண்ணி மேலே செல்ல மாட்டாதவன் போல உழன்றான்.

தோ நோ சூஜோ இப்போது தலையிட்டான்.

'தெய்வ மாக்கதைக்குரிய வானவர் நெசவாரணங்கும் ஆயரிளைஞனும் நுகர்ந்த காதலின்பம் என்றென்றும் நிலை யானது. அணங்கின் காதலும் அவ்வானவ நெசவாரணங்கின் காதலை ஒத்ததாய் இருந்திருக்கக்கூடுமானால், அவள் துன்னல் திறமை சற்றுக் குறைத்திருந்தால் கூட நீங்கள் பொருட் படுத்தியிருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஆயினும் இத்தகைய ஆரணங்குப் பெண்மணியை நீங்கள் அறிந்திருந்தும் கூட உலகத்தில் பெண்ணினம் விரும்பத்தகாத ஒரு வற்றற் பாலைப் பரப்பு என்று நீங்கள் நினைக்கிறீர்களே, அது பற்றி நான் வியப்படைகிறேன்' என்றான்.

உமா நோ கமி மீண்டும் தொடர்ந்தான்.

'இன்னும் கேளுங்கள்'

'இதே சமயத்தில் நான் இன்னொரு மாதரசியையும் கண்டு பழகி வந்தேன். அவள் முதலணங்கைவிட எவ்வளவோ உயர் குடிப் பிறந்தவள். கவிதை, விரைவுக் கையெழுத்து, வீணை வாசிப்பு ஆகியவற்றில் அவள் வல்லவள். அவள் ஒரு