பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

71

சாதாரணமான பெண்மணியல்லள் என்பதை அவள் நாநயமும் கைநயமும் ஒருங்கே காட்டின. அவளை அறிந்த எவரும் இதை மறுக்க முடியவில்லை. இவற்றுடன் தோற்றத்திலும் அவள் குறைந்தவளாயில்லை. மட்டான அழகுடையவளே. மேற் குறிப்பிட்ட அணங்கு காரணமாக நான் துன்புற்ற சமயங்களி லெல்லாம். இடையிடையே மன அமைதி நாடி நான் இப்புதிய மாதை இரகசியமாகச் சென்று காண்பதுண்டு, ஆனால் நாளடைவில் அவள் மீதே நான் முற்றிலும் காதல் கொண்டு விட்டதை உணர்ந்தேன்.'

'முதல் அணங்கு மாள்வுற்ற சமயம் நான் கடுந்துயரில் ஆழ்ந்திருந்தேன். ஆயினும் சென்றதை எண்ணி எண்ணி வருந்துவதில் பயனில்லை யாதலால், நான் புதிய மாதரசியை முன்னிலும் அடிக்கடி சென்று காணலானேன். விரைவிலேயே அவள் உள்ளம் நிலையற்றது, சபல முடையது என்று கண்டேன். நான் இல்லாத சமயம் தான் விரும்பாத முறையில் அவள் நடந்து வந்தாள் என்பதை நான் நேரிடையாகக் காணாவிட்டாலும் உய்த்துணர்ந்து கொண்டேன், இது முதல் நான் அவளை நீண்ட நாள் டையிட்டே சென்று காணத் தொடங்கினேன். கடைசியிலேயே அவளுக்கு இன்னொரு காதலன் இருந்தான் என்பது உறுதியாயிற்று.

'அது மாசி மாதம் (இறையிலாமாதம்). முழு நிலா இரவில் எங்கும் வண்ண ஒளி வீசிற்று. அரண்மனையிலிருந்து நான் புறப்பட்ட போது, நான் அரண்மனை இளைஞருள் ஒருவனைச் சந்தித்தேன். அன்றைய இராப்பொழுதை நான் ‘தைனாக’ னிலேயே கழிக்கப் போவதாக அவன் கேட்டதும், தானும் அதே திசையில் வருவதாகக் கூறிக் கொண்டு என்னுடன் வந்தான். நாங்கள் சென்ற பாதை மாதரசியின் மாளிகை வழியாகச் சென்றது. அவன் அங்கேயே இறங்கினான். மிக அவசியமாகக் கவனிக்க வேண்டிய அலுவல் தனக்கு அப்பக்கம் இருந்ததாகவும் கூறினான்.

'மதிற்புறம் பாதிக்கு மேல் பாழடைந்து கிடந்தது. அதன் பிளவுகளினூடாக நிழலடர்ந்த ஓர் ஏரியின் நீர்ப்பரப்பு காட்சியளித்தது. நிலவொளிகூட அந்த இடத்தைக் கடந்து விரைந்து செல்ல விரும்பாமல் அங்கேயே தயங்கித் தயங்கி நின்று