பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

75

களுக்கெல்லாம் அவள் அழகு போதிய பரிசாயிருந்தது. அவளை நான் என் மனைவியாக்கிக் கொள்ள எண்ணியதில்லை. ஆயினும் அவள் மீது என் பாசம் வளர்ந்து கொண்டே வந்தது. அவளை ஒரு கணம் நினையாமலிருக்க முடியாது என்னும் நிலைக்கு வந்து விட்டேன். அதேசமயம் அவளும் என்னிடம் முழுநிறை நம்பிக்கை வைத்திருந்தாள். அவளுக்கு நியாயமாகக் கோபமூட்டும் வகையில் நான் அடிக்கடி நடந்து கொண்ட போதிலும், எதுவும் தவறாக நடக்காதது போலவே அவள் அமைதியுடனிருந்தாள். அவள் நம்பிக்கை அவ்வளவு ஆழ்ந்ததாயிருந்தது. பல வாரங்கள் தொடர்ச்சியாக வராமலிருந்து ஒருநாள் வந்தால்கூட, நாள் தோறும் வருபவனை வரவேற்பது போல அவள் இன்முகத்துடன் என்னை வரவேற்றாள். எப்போது வந்தாலும் எப்படி வந்தாலும் அட்டியின்றி வரவேற்கும் இந்த அமைதி இறுதியில் எனக்கே மனவருத்தம் ஊட்டுவதாயிருந்தது. இவ்வரிய நம்பிக்கைக்கு இனிமேல் தகுதியுடையவனாயிருக்க வேண்டுமென்று நான் துணிந்தேன்.

'அவள் தாய் தந்தையர் உயிருடனில்லை. நான் அவளை எவ்வளவு கடுமையாக நடத்தினாலும் அவள் அவ்வளவு அமைதியாய் இருந்ததற்குக் காரணம் இதுவே. ஏனெனில் உலகத்தில் அவளுக்கிருந்த ஒரே தொடர்பு நான் தான். ஆயினும் அவள் வகையில் நான் கொண்ட உறுதி நீடிக்கவில்லை. விரைவில் அவளை நான் முன்னிலும் பன்மடங்கு மோசமாகவே நடத்த நேர்ந்தது. இச்சமயம் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி பின்னாட்களிலேயே எனக்குத் தெரிய வந்தது. எங்கள் நட்புறவை அறிந்து கொண்ட யாரோ ஒருவர் புதைவு மறைவாக அவளுக்குக் காதற் கடிதம் எழுதினர். இது அவளுக்கு அச்சமும் வேதனையும் அளித்தது. அவள் துயரத்தை உணராத நிலையில், நான் அவளை அடிக்கடி நினைத்த போதிலும், எப்படியோ நீண்ட காலம் அவளைக் காணாமலும் கடிதங்கள் அனுப்பாமலும் இருந்துவிட்டேன். அவன் மனத் துயரம் உச்ச நிலையடைந்திருந்த சமயத்திலேயே அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. எனவே அவள் “என் இயத்தின் ஏந்தல்” என்ற புனை பெயர் கொண்ட மலர் ஒன்றைக் கொய்து அதை எனக்கு அனுப்பி வைத்தாள்.'