பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

77

நான் வந்த சமயம் அவள் மறைந்துவிட்டாள். அவள் உயிருடன் இருக்கின்றாளோ, இல்லையோ; உயிருடன் இருந்தாலும் அவள் மிக மோசமான நாடோடி வாழ்வு தான் நடத்திக் கொண்டிருக்க முடியும்.

நான் அவளை நேசித்த காலத்திலேயே அவள் என் பிழைகளுக்குரிய தன் கண்டனத்தை ஒரு சிறிது வெளிப்படக் காட்டியிருந்தால், அவள் இப்படி வீடற்று நாடோடியாய்த் திரிந்தலைய வேண்டி வந்திராது. ஏனெனில் அந்நிலையில் நான் அவளை இவ்வளவு நெடுநாள் புறக்கணிக்கத் துணிந்திருக்க மாட்டேன். அத்துடன் இறுதியில் எப்படியும் அவள் பாசத்தை ஏற்று அவளை எனக்கு உரிமையாக்கிக் கொண்டிருப்பேன். அக்குழந்தையும் அழகுமிக்கதாகவே இருந்தது. அவர்களைத் தேடித் தேடி நான் நாட்கள் பல கழித்தும், இதுவரை அதில் வெற்றி எதுவும் காணவில்லை.

'உமா நோ கமி உங்களிடம் கூறியதை ஒத்த துயரமிக்க கதை தான் இதுவும் என்று எண்ணுகிறேன். அவள் காதலித்தாள். காதலிக்கவும் பெற்றிருந்தாள். ஆயினும் காதலிக்கப் பெறாத காதலி நிலையைவிட அவள் நிலை எவ்வகையிலும் மேம்பட்டதாயில்லை. உண்மையில் நான் அவளை மறக்க முடிகிறது.விரைந்து மறந்து கொண்டு தான் வருகிறேன். ஆனால் அவள் என்னை மறக்க முடியாது என்றே நம்புகிறேன். மறக்க விரும்பும் உணர்ச்சிகள் அவள் உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு தான் இருக்கக்கூடும். ஏனெனில் இப்போது அவள் வாழ்க்கை பாதுகாப்பும் அற்றது, மகிழ்ச்சியுமற்றது என்றே என் உள்ளம் கற்பனை செய்து காண்கிறது'

உமா நோ கமி மீண்டும் பேசினான்.

'நண்பரே! மொத்தத்தில் சென்றுவிட்ட அவளுக்காக நான் இப்போது ஏங்கி வாடினாலும், இருக்கும் போது அவள் ஒரு தீராத் தொல்லையாகவே இருந்தாள். இத்தகைய ஒருத்தி இறுதியில் என்றேனும் ஒரு நாள் விட்டுத் தொலைக்க நான் விரும்பாது இருந்திருக்க முடியாதென்றே நான் மனமார எண்ணுகிறேன். அவளைவிட யாழ்நங்கை அறிவுத்திறம் மிக்கவளே. ஆனால், அவள் மிகுந்த சபல உணர்ச்சி