பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

79

அவளிடம் சரிவரப் பேசி எவரும் நற்பயன் பெற முடியும். ஆனால் இத்தகைய பிரச்சினைகள் அறிந்து கையாளுவதுடன் அவள் திறமை நின்றுவிடவில்லை. கற்றறிந்து தேர்ந்த புலவர்கள் கூட அவளுடன் சரிசம நிலையில் பேச முடியாது. அவர்களைத் தலைகுனிய வைக்கும் அளவு அவள்அறிவு ஆழ அகல முடையதாய் இருந்தது.

‘அவள் தந்தை ஒரு பேராசிரியர். அவரிடம் நான் பாடம் பயின்று கொண்டிருந்தேன். அவருக்குப் பல புதல்வியர் இருந்ததாக நான் கேள்விப்பட்டிருந்தேன். ஆயினும் தற் செயலான சூழ்நிலை நிகழ்ச்சிகளால் அவள் ஒருத்தியினிடமே நான் ஒன்றிரண்டு சொற்கள் பரிமாற நேர்ந்தது. அப்பெண்ணே நான் குறிப்பிட்ட அறிவாரணங்கு. நாங்களிருவரும் ஒருங்கே காணப்பட்டது தந்தை செவிக்கு எட்டிற்று. அவர் உடனே கையில் இனிய தேறல் கலத்துடன் என்னை அணுகினார். 'இரு மனைவியர்' பற்றிய பாடலையும் சாடையாகச் சுட்டிக் காட்டினார்.

ம்

'துரதிருஷ்ட வசமாக, எனக்கு அவ் வணங்கிடம் ஒரு சிறிதும் விருப்பம் ஏற்படவில்லை. ஆயினும் அவளிடம் இணக்க நயத்துடனேயே பழகினேன். அவன் அதன்மீது என்னிடம் மிகுந்த அக்கறை காட்டினான். உலகில் முன்னேறுவதற்கு நான் என்னென்ன செய்ய வேண்டுமென்று எனக்கு அறிவுரைகள் பல எடுத்துரைத்து விரிவான விளக்கங்கள் வழங்கினாள். அவள் எனக்கு அனுப்பிய கடிதங்கள் வியத்தகு முறையில் கடித லக்கண நடையில் அமைந்திருந்தன. முற்றிலும் சீன எழுத்துகளையே அவள் கையாண்டு தன் புலமை காட்டினாள். இதற்கு ஒரு கைம்மாறாக அவளைச் சென்று காண்பது என் கடமை என்று கருதினேன். அவளையே என் ஆசிரியராக்கிச் சீன மொழியின் கவிதைகள் இயற்றக் கூடப் பழகிக் கொண்டேன்.

‘என் கவிதை முயற்சிகள் மோசமானவை, தட்டித் தடவித் தள்ளாடியவை. ஆயினும் அந்த அளவேனும் கற்றதற்கு நான் இன்னும் அவளிடம் நன்றியுடையவ னாயிருக்கிறேன். ஆனால் இந்நிலையிலும் அவள் எவ்வகையிலும் என் மனைவியாகத் தக்கமாதிரி அணங்கல்லள். ஒரு முழு மூடத்தைக் கட்டிக் கொண்டு வாழ்வதில் எவ்வளவோ இடர்கள் இடர்கள் இருக்கக்