பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

75

கிறேன். ஆனால் அவன் ஒரு துடைநடுங்கி. நீ போய் அவனிடம் நேரிடையாகவே சொல்லி அவனிடமிருந்து காரியத்தை முடி, ஷேர்கானைக் கூப்பிட்டனுப்பியோ, அவன் வராவிட்டால், அவன் வீடேகியோ, எப்படியாவது அவனைத் தொலைத்து விடுங்கள். அதன்பின் நயமாக அவன் வீட்டுப் பறவையை இங்கே கொண்டு வரலாம்.

வா-ரா: தங்கள் உத்தரவுப்படியே செய்கிறேன்.

(போகிறான்.)

ஜெஹாங்: அன்று தடை, தந்தை. அவர் பேசாது எனக்கு மேஹரை மணஞ்செய்து வைத்திருந்தால் அன்றே நான் மனிதனாயிருந்திருப்பேன். இப்போது உலகின் நல்லெண்ணத் தடை ஒரு கணவன் உருவில் என்முன் நிற்கிறது. நான் இப்போது என் கருத்தை நிறைவேற்றக் கொலைகாரனாக மாறவேண்டும். ரேவா பிறிதொரு தடை. ஆனால் ரேவ... ஒரு அழகிய நிழல்! மற்றும் நீதி, நேர்மை, பேரரசின் மதிப்பு ஆகியவைகளை யெல்லாம், இந்த ஒரு வகையில் என்னால் ஒரு பொருட்டாக மதிக்க முடியாது. எப்படியும் பார்க்கிறேன், ஒரு கை!

காட்சி 6

(பாண்டியாவிலுள்ள ஷேர்கானின் நாட்டுப்புற மாளிகை. லைலா பாட, ஷேர்கானும் மேஹரும் அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.)

லைலா:

வானம் பொழியுது, பூமி குளிருது; மாதிவள் உள்ளத் தீ ஆறவில்லை!

மதியம் எழுந்தது, வண்புயல் மாறிற்று;

மாதிவள் உட்புயல் மாறவில்லை!

நூர்: போதுமடி, உன் சனியன் பிடித்த பாட்டு போய் உறங்கித் தொலை!

'லைலா முகங்கடுத்த வண்ணம் அறைக்குள் செல்கிறாள். நூர்ஜஹானும் போகிறாள்.)