பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




76

அப்பாத்துரையம் - 23

ஷேர்: ஆக்ராவிலிருந்து வந்ததுமுதல் மேஹர் என்னவோ போல் தான் இருக்கிறாள். என்னவென்று தெரியவில்லை. அன்று என் இல்வாழ்க்கை அமைதியாகத் தானிருந்தது. அப்போது அவள் கூறினாள், இன்பத்தின் எல்லை துன்பத்தை அழைக்கும் என்று. அது சரியாய்ப் போய்விட்டது. ஆனால் இது அவளுக்கு எப்படி முன் கூட்டித் தெரியும்?

(படுக்கையில் சாய்ந்து கண்மூடுகிறான். கொலையாளிகள் முக மூடியணிந்து வருகின்றனர்.)

ஒருவன்: இங்கே, இப்படி உடைவாளைக் கொடு. மற்றவன்: பேர்வழி இதோ தூங்குகிறான், வெட்டு!

(ஷேர்கான் கண்விழித்துத் திடுக்கிட்டெழுகிறான்.)

ஷேர்: யாரடா அது, கொலைசெய்யவா பார்க்கிறீர்கள்? இதோ (வெட்டுகிறான்) இதோ (மீண்டும் வெட்டுகிறான்.)

(தலைவன் தவிர யாவரும் வீழ்கின்றனர்)

தலைவன்: ஐயா என்னை விட்டு விடுங்கள், நான் போய்விடுகிறேன்.

(நூர்ஜஹான் அரவம் கேட்டு வருகிறாள்.)

நூர்: ஆ, இது என்ன?

ஷேர்: சற்றுப் பொறு. (தலைவனை நோக்கி) உன்னை -டு விடுகிறேன். உன்னை யார் அனுப்பினார்கள், சொல். தலைவன்: வங்காள முதல்வர்.

ஷேர்: அவர் ஏன் என்னைக் கொல்ல முயலவேண்டும்? தலைவன்: பேரரசர் உத்தரவு.

நூர்: ஆ!

ஷேர்: அப்படியா! சரி, நீ போகலாம்.

நூர்: அன்பரே!

ஷேர்:காலையில் பேசிக்கொள்ளலாம்,மேஹர்,போய் உறங்கு.