பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

காட்சி 7

77

(பர்துவானில் ஷேர்கான் மாளிகை அறை. நூர்ஜஹான் தனியே

இருக்கிறாள்.)

நூர்: (பெருமூச்சுடன்) பர்துவான், அதே பர்துவான் தான்! ஆனால் அன்றைய அமைதி எங்கே? (முன்னும் பின்னும் தாவி நடந்தவண்ணம்) இளமையின் துடிப்பை அடக்கித்தான் இருந்தேன். அது ஒரு குழந்தை விளையாட்டுப் போல மறைந்து தானிருந்தது. நான் தூயவீரன் ஷேர்கானின் மனைவி. ஒப்பற்ற நங்கை லைலாவைப் பெற்றெடுத்த தாய்! ஆனால், இவ்வளவிற்கும் பிறகா, அமுங்கிக் கிடந்த என் மனஎழுச்சி எழுந்துவந்து என்னை அலைக்கழிக்க வேண்டும்? கட வுளே, பெண்ணின் காதலைப் புயலாக்கி, அவள் நெஞ்சை ஏன் இப்படி மலராக்கி இருக்க வேண்டும்?

(ஷேர்கான் வந்து நுழைகிறான்.)

ஷேர்: மேஹர், என் நாள் நெருங்கிவிட்டது. வங்காள முதல்வர் பர்துவான் வந்திருக்கிறார். என்னை நேரில் அழைத்திருக்கிறார். நான் போகிறேன்.

நூர்: போகவேண்டாம், அன்பரே! போகவேண்டாம். இப்போது போனால்... திரும்பி வரமாட்டீர்.

ஷேர்: அது தெரியாமலா போகிறேன்? நான் திரும்பாவிட்டால் என்ன, மேஹர்? நீ அதன் பின் பரந்த மாநிலத்தின் பேரரசியாகப் போகிறாய்!

நூர்: இதென்ன பேச்சு, கண்ணாளா!

ஷேர்: நான் இறக்கத்தான் விரும்புகிறேன், மேஹர். இனி எனக்கு வாழ விருப்பமில்லை.

நூர்: ஏன் அன்பரே!

ஷேர்: ஏனா! உனக்குத் தெரியாததல்ல, இப்போது நானும் உணர்ந்து கொண்டேன். நீ என்னைக் காதலிக்கவில்லை.

நூர்: உங்களுக்கு நான் என்ன குறை செய்தேன்?

ஷேர்: ஒரு குறையும் செய்யவில்லை. ஆனால் உனது இந்தக் கேள்வியே போதும், உன்னிடம் காதல் இல்லையென்பதைக்