பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

குரல்கள்: எழுங்கள்! எழுங்கள்!

79

ஷேர்: எல்லாம் நான் எதிர்பார்த்ததுதான். நான் இன்று திரும்பும் எண்ணத்துடன் வரவில்லை. ஆகவே இதோ! (ஷேர்கான், குதுப்பைத் தாக்குகிறான். மறைவிலிருந்து வீரர்கள் வந்து சூழ்ந்து தாக்குகின்றனர். வீரர்கள் யாவரும் ஷேரின் தாக்குதலால் வீழ்கின்றனர். குதுப் தனியனா கிறான்) குதுப்! இன்று நீ தோற்றுவிடுவாயென்று அஞ்சவேண்டாம். இதோ நானே என்னைச் சாவுக்கு ஒப்படைக்கிறேன். என் வாளை இதோ வீசியெறிந்துவிடுகிறேன். பேரரசர் ஆணையை நிறைவேற்றிக்

கொள்.

(ஷேர் வாளையெறிந்து மண்டியிடுகிறான். அவன் தலை

நிலத்தில் புரளுகிறது.)

குதுப்: ஆ! ஈடும் எடுப்புமில்லாத சிங்க ஏறு சிறு நரியாகிய என் கையின் பெயரால் தன்னை மாய்த்துக் கொண்டது. சரி, பேரரசர் ஆணைக்கு இனி அஞ்ச வேண்டியதில்லை.

காட்சி 9

(ஆக்ராவில், அஸஃவ் வீடு, அஸஃவ் அரசவைச் செல்வர்.)

அஸஃவ்: கேட்டீர்களா, செய்தி?

எல்லோரும்: என்ன, என்ன?

அஸஃவ்:

இளவரசன் குஸ்ரூ

தில்லியை வந்து

முற்றுகையிட முயன்றானாம். தோல்வியுற்று லாகூர் நோக்கி

அவன் ஓடிப்போக வேண்டியதாயிற்றாம்.

1-ம் அ செ: அய்யோ, பாவம். சொல்வார் சொல்கேட்டுத் துன்பத்திற்காளானான் குஸ்ரூ.

(அரசவைச் செல்வர் அனைவரும் போகின்றனர்.)

அஸஃவ்: ஆம். எல்லாம் ஒரே கொந்தளிப்பாயிருக்கிறது. என்ன வாகுமோ தெரியவில்லை. அதோ அப்பா வருகிறார். அவர்தான் நிலைமையை எப்படிச் சமாளிக்கிறாரோ தெரியவில்லை.

(ஆயஷ் வருகிறான்)