பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




80

ஆயஷ்: அஸஃவ்!

அப்பாத்துரையம் - 23

அஸஃவ்: அப்பா!

ஆயஷ்: நம் இருவருக்கும் பெரிய சோதனை வந்திருக்கிறது. அஸஃவ்! பேரரவர் நயம் பாதி, பயம் பாதி காட்டி நம்மை வசப்படுத்தப் பார்க்கிறார். மேஹரை அவருக்கு இணங்க வைத்தால் நமக்கு இன்னும் உயர்ந்த பதவியாம். இல்லாவிட்டால் எனது இப்போதைய பதவிக்கும் இடையூறாம்.

அயா: நீங்கள் என்ன சொன்னீர்கள், அப்பா!

ஆயஷ்: நான் இப்போதே பதவி துறந்துவிடுகிறேன் என்றேன்.

அஸ: அதற்கு அவர் என்ன சொன்னார்?

ஆயஷ்: 'சரி, இப்போதிருக்கட்டும்.பார்ப்போம்' என்றார். அஸ: நானும் கூறுகிறேன். சரி, இப்போது இருக்கட்டும் பார்ப்போம்!

காட்சி 10

(ஜெஹாங்கீர் கொலுவிருக்கை; குற்றவாளிக் கூண்டில் குஸ்ரூ; பர்வேஜ், குர்ரம், சஹரியார் முதலிய மற்ற புதல்வர்கள்; ஆயஷ், படைத்தலைவன் மகபத்கான், அவைச் செல்வர் முதலானோர்)

ஜெஹாங்: குஸ்ரூ, நீ எந்தக் குற்றத்திற்காக இங்கே கூண்டில் நிற்கிறாய் என்று தெரியுமா?

குஸ்ரூ: தெரியும்

ஜெஹாங்: உனக்கு நான் எத்தனையோ தடவை எச்சரிக்கை செய்ததுண்டு.

குஸ்ரூ: ஆம். செய்ததுண்டு.

ஜெஹாங்: அப்படி இருந்தும் குற்றம் செய்திருக்கிறாய். இதை நீ ஒத்துக்கொள்கிறாயா??

குஸ்ரூ: ஆம். ஒத்துக் கொள்கிறேன்.