பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




84

அப்பாத்துரையம் - 23

நூர்: போக உத்தரவில்லையே, லைலா!

லைலா: என்ன வெட்கங்கெட்ட பேச்சுப் பேசுகிறாய், அம்மா, அவர் யார், உனக்கு உத்தரவிட?

நூர்: அவர் பேரரசர். நம்மைத் தடுத்து நிறுத்த முடியும்.

லைலா : நீ அவர் வேலைக்காரியா? அல்லது அவர் சிறைக்கைதியா?

நூர்: தெரியாது.

லைலா: (சிறிது நேரம் வாளாவிருந்து) தாயே! நீ உன்னையே வஞ்சித்து நடக்கிறாய். இங்கே நீ உன் விருப்பப் படி வராதிருக்கலாம். ஆனால் உன் விருப்பத்திற்கெதிராகவும் வந்து விட்டதாகக் கூறமுடியாது. நீ பேசாதிருந்தால் உன் விருப்பப்படி இருக்கிறாய் என்றுதானே பொருள் படும்? கணவனையிழந்து, பின் கணவனைக் கொன்றவனிடத்தில், அனாதைப் பிச்சைக்காரி அரண்மனை இன்பத்துக்கு அலைந்தவள் போலக் கிடப்பதா? நான் இப்போது கேட்கிறேன், நீ உண்மையில் இங்கிருந்து போக விரும்புகிறாயா?

நூர்: ஆம். விரும்புகிறேன்.

லைலா: அப்படியானால் பேரரசி வாயிலாகப் பேரரசரை கேட்டுக் கோரிக்கையிடு.

நூர்: அவர் சம்மதிக்கமாட்டார்.

லைலா: (தரைமீது காலை அறைந்து) உனக்கு விருப்ப மில்லை என்று வேண்டுமானால் சொல். அவர் சம்மதிக்கிறாரா இல்லையா என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன். நீ கேட்டால் அவர் கொடுக்காதிருக்க முடியாது என்பதை நான் அறிவேன். நீ கேட்பாயா?

நூர்:கேட்கிறேன்.

லைலா: சரி, பெறும் பொறுப்பு இனி எனது. வருகிறேன்.

(போகிறாள்.)

நூர்: ஆ, என் மகள், அவள் நம்பிக்கையை இழந்து விட்டேன்! அவள் கூரிய அறிவு என்னைத் துளைத்துப் பார்த்து