பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

85

விட்டது! ஆ, லைலா! நான் ஷேர்கானின் மனைவியல்ல; நீ ஷேர்கானின் மகள்தான்! தந்தையை இழந்த பின் உன் முகத்தில் புன்முறுவலின் ஒரு நிழலைக் கூட நான் கண்டதில்லை. நீயும் பெண்தான், நானும் பெண்ணாகத்தான் இருக்கிறேன். ஆனால் என்னைப் பெண்மை ஆட்டிப்படைக்கவில்லை. பெண்மை எனக்கு ஒப்பற்ற அழகாற்றலைக் கொடுத்திருக்கிறது.அதைவைத்து நான் ஆண்களை ஆட்டிப் படைக்க, அவர்கள் கையிலுள்ள ஆதிக்கத்தைப் பெற்று அவர்கள் மீது பழிவாங்கத் துடிக்கிறேன்.

(கதிஜா அவ்வழியாகச் செல்கிறாள்.)

இதோ இன்னொரு பெண்மையின் பிம்பம்! நான் மட்டுமா அழகை ஆதிக்கமாக்கப் பார்க்கிறேன்? அண்ணா அஸஃவ் தன் புதல்வியாக இவளைத் தூண்டிலாக வைத்து அரசவைக் காளை யரிடையே நீந்தி ஆதிக்க விலாங்குகளைத் தேடிப் பிடிக்க வில்லையா? ஆ, பெண்மையே, ஆதிக்கம் வசிக்கவேண்டிய நீ அடிமையானாய்! நீ ஆதிக்கக்காரரை அலைக்கழிக்க வைக்கிறாய்!

காட்சி 12

(ஆக்ரா அரண்மனை அந்தப்புறம், ரேவாவும் ஜெஹாங்கீரும் உரையாடு கின்றனர்.)

ஜெஹாங்: ரேவா, நீ எல்லாம் அறிந்துகொண்டாய். நான் அவளைக் கைது செய்ய வைக்கவில்லை. ஆனால், ஆம்... என்றேனும் அவளாக மனம் இளகி வந்து என்னை மணம் செய்துகொள்ள நாடலாம் என்ற நம்பிக்கையால் என் அரண்மனையில் கொண்டுவந்து வைத்திருக்கிறேன் - நாலு ஆண்டுகளாக!

ரேவா: நாலு ஆண்டுகளாகக் கனியாத கனியா இனிக் கனியப் போகிறது? அவளை இனி வைத்திருக்கலாகாது.

ஜெஹாங்: ஒரு தடவை அவளைச் சந்திக்கக் கேட்கலாமா? உன் ஆணையால் தான் இதுநாள்வரை நான் சந்திக்கவில்லை. ஆனால் என் மனம் அவளை எப்படியும் சந்தித்துவிடத் துடியாய்த் துடிக்கிறது.

ரேவா: அவளாக விரும்பினாலன்றி நீங்கள் அவளைப் பார்க்கக் கூடாது- பார்க்க முடியாது. மேலும், மனத்தின்