பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




88

அப்பாத்துரையம் - 23

நூர்: நான் எதுவும் விரும்பவில்லை, அம்மணி. பர்துவானுக்குப் போக மட்டுந்தான் விரும்புகிறேன்.

ரேவா: யோசித்துச் சொல், மேஹர்! நீ விரும்புகிறாயா, விரும்ப வில்லையா? உன் விருப்பமறிந்து அதன்படி செய்ய ஒருப்பட்டே வந்திருக்கிறேன்.

நூர்: கணவன் அன்பு, பேரரசு- இரண்டையும் எத்துணை எளிதாக இன்னொருவருக்கு அளிக்கத் துணிந்து விட்டீர்கள்? இது எப்படி முடிந்தது அம்மா உங்களுக்கு?

ரேவா: (சோகப் புன்னகையுடன்) இந்துப் பெண்கள் இதையும் செய்ய முடியும், இதற்கு மேலும் செய்ய முடியும் அம்மா! எங்கள் இன ஆடவர் பேரரசையும் வெளியாருக்குத் தந்து, எம்போன்ற பெண்களையும் தந்து தியாக மூர்த்திகளாயிருக்கவில்லையா? பிறர் ஆள்வதற்கென்றே அமைந்த இனத்தில், பெண்களும், ஆண்கள் ஆள்வதற்கென்றே வாழ்வதில் என்ன வியப்பு!

நூர்: இந்து இனம், பெண்கள் இனம் ஆகிய இரண்டின் தோல்வியையும் நீங்கள் நன்கு நிழற்படுத்திக் காட்டுகிறீர்கள். அது கிடக்கட்டும்.நான் உங்கள் கோரிக்கையை ஏற்றுப்பேசியாகிவிட விரும்பவில்லை. உங்கள் சிரமத்திற்கு நன்றி.

ரேவா: அவ்வளவுதான். நான் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்து விட்டேன்.வருகிறேன்.

(போகிறாள்)

நூர்: மாநிலத்தின் பேரரசி! எத்தனை பெரும்பேறு! சீச்சீ, இதை நினைப்பதே தவறு!..ஆனால், ஆனால், நான் அழுது மூலையில் இருக்கமட்டும்தானா பிறந்திருப்பேன்? அப்படிப் பிறந்திருந்தால், இந்த முகம் இவ்வளவு சாதித்திருக்க முடியுமா? ஆ, என் நெஞ்சத்தில் இரண்டு உள்ளங்கள் இருக்கின்றன போலும்! இதைச் செய் என்கிறது ஒரு உள்ளம்! அதைச் செய், இதைச் செய்யாதே என்கிறது பிறிதொரு உள்ளம்! ஒரு உள்ளம் லைலா பக்கம் கனிகிறது, ஷேர்கானை நினைத்துப் பெருமூச் செறிகிறது. மற்றொன்று பேரரசினை நோக்கி கும்மாள