பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

89

மடிக்கிறது. (பல கணியை அகலத் திறந்துவிடுகிறாள்) ஆ, என்ன வெப்பு! இது புறவெப்பா அல்லது அக வெப்பா?

(அஸஃவ் வருகிறான்)

என்ன சேதி அஸஃவ்? ஏன் இரவோடிரவாக இத்தனை அவசரம்?

அஸஃவ்: ஏனென்று உனக்குத் தெரியாதா?

நூர்: ஊகிக்க முடியும். சரி, நான் விரும்பவில்லை என்று சொல்லிவிடு.

அஸஃவ்: என்ன, போகுமுன் ஒரு தடவை பார்க்கக்

கூடாதா?

நூர்:கூடாது.

அஸஃவ்: மேஹர், நீ இப்படிப் பட்டிக்காட்டுப் பெண்ணாயிருப்பாய் என்று நான் எண்ணவில்லை. உன் சோக நடிப்பு மதிப்புடையது தான். ஆனால் சோகத்திலேயே மிதக் கும் நேரமல்ல து. பெரிய பேரரசு- பெருஞ் செல்வம் பெரிய அதிகாரம் இப்போது உன் காலடியில் வந்து தவழ்கிறது. நீ எடுத்தணியலாம். காலால் மிதித்துத் துவட்டியும் எறியலாம். எது செய்யப் போகிறாய்?

நூர்: எறிகிறேன். என்ன துணிச்சல்! கூட்டுச் சதியில் இறங்கியிருக்கிறாய், அஸஃவ். இதற்கா இந்த இரவில் வரவேண்டும்? போ, போ!

அஸஃவ்: நான் போகத் தடையில்லை. ஆனால் பின்னால் வருந்தப் போகிறாய். பேரரசியாக நீ விரும்பாதிருக்கலாம். தெருவில் பிச்சைக் காரியாக...

நூர்: (உக்கிர கோபத்துடன்) சீ, உனக்கு வெட்கமில்லை, உன் தங்கை நீ இருக்கும்பொழுது ஏன் பிச்சைக்காரியாக வேண்டும்? அப்படியே உன்னுடன் சேர்ந்து நான் பிச்சைக் காரியாக இருக்க நேர்ந்தாலும், அப்போது நான் உன்னைக் குறைகூற மாட்டேன். நான் ஒரு பிச்சைக் காரியாயிருக்கவே விரும்புகிறேன்.