பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

93

(தோழி வருகிறாள்.)

தோழி: ஐயா, பேரரசி ரேவா தங்களைக் காண விரும்புகிறார். ஜெஹாங்: வருகிறேன் நீ போ. இதோ போய் வருகிறேன்.

(தோழியும் ஜெஹாங்கீரும் போகின்றனர்.)

நூர்: ஆகா, அவள் விண்மீன்; நான் நிலா. அங்கே மதிப்பு; இங்கே அன்பு மட்டும், நான் காதலுக்கு, அவள் ஆட்சிக்கா? பார்க்கிறேன்.

(லைலா வருகிறாள்.)

லைலா: என்னைக் கூப்பிட்டதாகக் கேள்விப்பட்டேன். எதற்காகக் கூப்பிட்டீர்கள்?

நூர்: இது என்ன கோலம் லைலா, என்னவோ மாதிரி பேசுகிறாயே? நான் உன் தாய் அல்லவா? கூப்பிடக் கூடாதா? என்னிடம் இப்படியா வந்து பேசுவது?

லைலா: உனக்கும் எனக்கும் இப்போது அத்தகைய தொடர்பு கிடையாது. நான் ஷேர்கானின் மகள், மேஹரின் மகள். நீ இப்போது நூர்ஜஹான், என் தந்தையைக் கொன்ற கொலைகாரனின் மனைவி. பண ஆசையினாலும், பதவிப் பேராசையினாலும் என் தந்தையின் கொலைக்கு உடந்தையா யிருந்து, அக்கொலைகாரனுக்குக் காமக் கிழத்தியாயிருக்கும் பேய். நூர்: (முகத்தைக் கைகளால் மூடி அழுகிறாள்) அந்தோ,

லைலா!

(ஜெஹாங்கீர் வருகிறான்.)

ஜெஹாங்: இது என்ன லைலா, நீ உன் தாய் என்றும் பாராமல் பேரரசியை அவமதிக்கிறாய். நானும் நீ நூர்ஜஹான் புதல்வி என்று பாராமல்..

லைலா: நான் நூர்ஜஹான் புதல்வியல்ல, ஷேர்கான் புதல்வி- நயவஞ்சகனாகிய உன்னால் கொல்லப்பட்டமாவீரனின்

மகள்.

ஜெஹாங்: பேச்சு அவ்வளவுக்கு வந்துவிட்டதா? இதோ, கவனிக்கிறேன்.சேவகா!