பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




94

அப்பாத்துரையம் - 23

ஆனால்

லைலா : கூப்பிடு சேவகரை, தண்டி; நினைவிருக்கட்டும். இது சிங்கத்தை வென்ற வீரனின் புதல்வி

என்பது!

நூர்: (மண்டியிட்டு அரசே, எனக்கு ஆண் மகவு இல்லை. இவள் என் ஒரே மகள். அவள் என்ன கூறினாலும் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

ஜஹா ஹாங்:

ங்: சரி, இனியாவது அவள் அத்துமீறாமல்

பார்த்துக்கொள்.

லைலா: அம்மா!

நூர்: லைலா!

(போகிறான்)

னி

லைலா: நடந்தது நடந்துவிட்டது. இனி உன்னை திட்டியும் பயனில்லைதான். ஆனால் ஒரு காரியம் செய்வாயா? அது இந்தப் பழிக்கு ஒரு கழுவாயாகவும் இருக்கும்.

நூர்: என்ன? பழியா, கழுவாயா?

லைலா: பழியோ, பழியில்லையோ? இப்போது நீ வானுலகில் ஒரு தேவியாக இருப்பதாகவே வைத்துக் கொண்டால்கூட, இதற்கு நேர்மாறான பேயாக நீ மாறிச் செயலாற்ற வேண்டும். இந்தப் பேரரசர் பரம்பரை முழுவதையும் கருவறுக்க வேண்டும். இதைச் செய்வாயா?

நூர்: (லைலா கைகளைப் பற்றிக்கொண்டு) கட்டாயம் செய்கிறேன்.இனி நீ கவலையில்லாமல் வேண்டிய முயற்சிகளைச்

செய்.

லைலா:அப்படியானால் நான் உன்னுடன் ஒத்துழைக்கிறேன்.

(போகிறாள்.)

காட்சி 16

(அரண்மனைப் பூங்கா. கதீஜா பாடிக் கொண்டிருக்கிறாள்.)

என் உளம் கவர்ந்தாய் நீ-ஓ ஓ

என் உளம் கவர்ந்தாய் நீ!