பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




96

அப்பாத்துரையம் - 23

என்ன செய்யும்? இயற்கையின் இந்த மாயப்புதிர் கண்டு நான் வியப்படைகிறேன். சஹரி யாரை அவள் காதலித்து, என்னை நீ காதலிக்கவைத்த காதல் செல்வன் குறும்பு கண்டு என்னால் சிரிக்காமலிருக்க முடியவில்லை!

கதிஜா: எனக்கு அந்தக் குறும்பு ஒன்றும் விளங்க வில்லையே!

குர்ரம்: விளங்கவில்லையா? என் அரசியல் வாழ்வு ஒரு புயலாயிருக்கப் போகிறது. ஆனால் என் காதலியாகிய நீ ஒரு தென்றல். எனவே இங்கே ஒரு புயலுடன் தென்றல்! அங்கே லைலா ஒரு எரிமலை, சஹரியார் ஒரு கவிதைமலர்.எனவே எரிமலையுடன் ஒரு மலர் அங்கே! இவை பொருந்துமா? புயலுடன் எரிமலையும், தென்றலுடன் மலரும் இணைவதல்லவா பொருந்தும்?

கதிஜா :

பொருத்தமாயிருக்கலாம்.

பிடிக்கவில்லை. குர்ரம்!

(போகிறாள்.)

காட்சி 17

எனக்கு

அது

(லாகூர் அரண்மனை, நூர்ஜஹான் தனித்திருக்கிறாள்.)

நூர்: ஆதிக்க மது அருந்தியிருக்கிறேன். அது எத்தனை இனிது! நாடி நரம்புகளில் அது எத்தனை சுறுசுறுப்புடன் ஓடுகிறது! தலைதெறிக்க ஓடும் குதிரை மீதமர்ந்தவன் போல் சொல்லுகிறேன் நான்! பழைய நனவுலகின் காட்சிகள், காற்று, நிலா, மரஞ்செடி, மனிதர் எல்லாம் எனக்கு இப்போது புதுத்தோற்றம் அளிக்கின்றன. உலகம் என்னைக் கண்டு புன்முறுவல் கூர்கின்றது!

(அஸஃவ் வருகிறான்.)

அஸஃவ்: பேரரசி வாழ்க! ஆங்கில நாட்டுத் தூதர் ரோ வந்து பேட்டிக்குக் காத்திருக்கிறார். சூரத்தில் கோட்டை கட்டப் பேரரசின் இணக்கம் கோருகிறார்.

நூர்: பேரரசர் இன்றே இணக்கம் தருவார் என்று சொல்லு. அவர் வந்ததும் ஆணை பிறப்பிக்கிறேன்.

(அஸஃவ் போகிறான்.)