பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




98

(அஸஃவ் வருகிறான்.)

அப்பாத்துரையம் - 23

வா அஸஃவ், வானர ராஜாவை என்னிடம் வரச் சொல்லு. அஸஃவ்: வானர ராஜாவையா? அந்தக் கொலைகாரனை நீ பார்ப்பதா?

நூர்: அதெல்லாம் உனக்கென்னத்திற்கு? அவனைப் பேசாது வரச் சொல்லு. அந்தக் கொலைகாரனில்லாவிட்டால் நான் எப்படிப் பேரரசியாயிருக்க முடியும்? நீ எப்படி அமைச்சனாக்கப்பட்டிருப்பாய்? நினைத்துப் பார்.

(அஸஃவ் போகிறான்.)

காட்சி 18

(தெக்காணம்; ராவண துர்க்கம். ஷாஜஹான், வானரராஜா) வா-ரா: என்னை வரவழைத்ததாக அறிந்தேன்.

ஷா: என் தம்பி குஸ்ரூவை இங்கேயே விட்டுவிட்டுப் போருக்குச் செல்ல எண்ணுகிறேன். அவனைக் காத்துப் பேணும்படி தான் உம்மை வரவழைத்தேன்.

வா-ரா: மிக நன்று. நான் பார்த்துக் கொள்கிறேன். (குர்ரம்

போகிறான்) சேவகா!

சேவகன்: எசமான்!

வா-ரா: கோட்டைக் கதவைப் பூட்டித் திறவுகோலை என்னிடம் கொடு. என் உத்தரவின்றி யாரும் வெளியே போக வேண்டாம். போ.

சே:அப்படியே.

(போகிறான்)

வா-ரா: பேரரசர் கைய கயாளாயிருந்து பேரரசியின் கணவனைக் கொன்றேன். பதவி உயர்ந்தது. இப்போது பேரரசியின் கையாளானேன். அத்துடன் குர்ரமின் பணியும் கிடைத்தது. இருவர் ஆணையில் ஒரு செயல், இருபுறமிருந்து பாராட்டு. இன்னும் உயர்வு, ஆகா!

(குஸ்ரூ வருகிறான்.)