பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

குஸ்ரூ: யார் இங்கே? வானர ராஜாவா? குர்ரம் எங்கே?

99

வா-ரா: ஆம். போருக்குச் சென்றிருக்கிறார். என்னை உன் காப்பாளனாக்கிச் சென்றிருக்கிறார்.

குஸ்ரூ: எனக்கு ஏன் காவல்? கோட்டைவாயிலுக்கு வெளியே நான் போகாமல் ஏன் அடைக்க வேண்டும்?

வா-ரா: காவல் அல்ல பாதுகாப்பு. தாங்கள் கவலையற்றுத் தூங்கலாம்.

(போகிறான்)

குஸ்ரூ: ஆ, என் உடன் பிறந்த அண்ணனே என்னை இப்படி நடத்துகிறான். அவனுக்கு நான் என்ன செய்தேன்? தந்தையை விட அவன் மீது பாசம் வைத்தல்லவா வந்தேன்?

(குஸ்ரூ தூங்குகிறான். கொலைகாரருடன் வானரராஜா வருகிறான். கொலைகாரர் குஸ்ரூவைக் குத்துகின்றனர்.) குஸ்ரூ: ஆ, அப்பா..! இது என்ன! என்னை யார் கொலை செய்வது? வானரராஜா? இப்போது புரிகிறது!

(விழுகிறான்.அனைவரும் மறைகின்றனர்.)

(அரண்மனை: நூர்ஜஹான், அஸஃவ்)

து

அஸஃவ்: மேஹர், இது முழுவதும் உன் திருவிளையாடல். வானர ராஜாவை ஏவிவிட்டுக் குர்ரம் மீது பழியைச் சாட்டி அவனையும் ஒழித்து விடப் பார்க்கிறாய்.

நூர்: அஸஃவ், நீ என் அண்ணனாயிருக்கலாம்; ஆனால் உனக்கு அரசியல் தெரியாது. இதிலெல்லாம் நீ தலையிட வேண்டாம். எச்சரிக்கை! என்னைப் பேரரசியாகும்படி நீ தான் தூண்டினாய்.நினைவிருக்கட்டும்.

அஸஃவ்: (தலையைக் கவிழ்ந்தவண்ணம்) சரி, ஆவது

ஆகட்டும்.

(போகிறான்)

நூர்: தீ கொழுந்துவிட்டெரிகிறது. குஸ்ரூ முதல் பலி. இனி அடுத்த பலி...