பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




100

அப்பாத்துரையம் - 23

(அழுது சிவந்த கண்களுடன் ரேவா வருகிறாள்)

ரேவா: பேரரசி நூர்ஜஹான்!

நூர்: பேரரசி ரேவா!

ரேவா: என் பிள்ளை குஸ்ரூ- அவனைக் கொலை செய்தது

நீ தானா?

நூர்: உனக்கு யார் அப்படிச் சொன்னார்கள்?

ரேவா: என் உள் நெஞ்சந்தான். வேறுயாருமில்லை. நான் அறிய விரும்புகிறேன், கொன்றது நீ தானா?

நூர்: நானே கொன்றிருந்தால்..

ரேவா: அது பெரும் பழி. அடாப்பழி. (நடுங்கித் துடிக்கும் குரலில்) பிள்ளை ஒன்றிருந்தாலல்லவா உனக்குத் தெரியும், பிள்ளையையிழந்த தாயின் துயர்?

ஆனால்...

ரேவா: நான் தாய். என்னிடம் விளக்கம் எதுவும் வேண்டாம், பேரரசி. பேரரசையும் மனமுவந்து உனக்குத் தந்தேன். என் கணவரையும் மனமுவந்தே கொடுத்தேன். ஆனால் தாய்மை- என் பிள்ளை-அதை ஏன் பறிக்க வேண்டும்?

இருகைகளாலும் முகம் பொத்திக் கதறுகிறாள். லைலா வருகிறாள்)

லைலா: இளவரசர் குஸ்ரூவை நீயா அம்மா கொன்றாய்?

நூர்:ரேவாவுக்கு ஒரே பிள்ளை. ஏன் அவன் மீது அட்டூழியம்?

நூர்: லைலா! மறந்துவிட்டாயா, நீ கூறியதை? நீ தானே என்னைத் தூண்டினாய், பேயாக மாறி இந்தப் பேரரசின் பரிவாரத்தைப் பழிவாங்கு என்று? நீ ஒத்துழைப்பதாகக் கூடக் கூறினாயே?

லைலா: போதும். நான் உன்னைப் பேயாட்டமாடச் சொன்னேன். நான் நினைத்தேன், நீ மனிதப் பேயாவாய் என்று. நீ கணவனைக் கொல்லச் செய்து கொலைகாரனை அணைத்த பேய் உருவின் பேய் வடிவம் கொண்டவள் என்பதை மறந்தேன்.இனி உன் பாதை வேறு, என் பாதை வேறு. என்னை இனி உன் பகை என்று