பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




102

அப்பாத்துரையம் - 23

லைலா: என் துயர் அகத்துயர்தான். ஆனால் புறத்துயர். எதிர்பாராததல்ல. என்ன செய்தி?

சஹ: குர்ரம் ஷாஜஹான் என்ற பெயரில் தன்னைப் பேரரசனாக அறிவித்துத் தில்லிமீது படையெடுத்தானாம். ஆனால் படைத் தலைவன் மகபத்கான் அவனை வென்று தெக்காணத்துக்கு ஓட்டி விட்டானாம்!

லைலா : பாவம். அவன் பிடிபட்டால் கொன்று விடுவார்கள். ஆயினும் பேரரசராக விரும்பினால், உம் உயிருக்கு ஆபத்து வரும். நான் பேரரசராக விரும்பவே மாட்டேன் என்று என்னிடம் ஆணையிட்டுக் கொடுங்கள்.

சஹ: இதோ! (ஆணையிடுகின்றான்; தோழி வருகிறாள்.) தோழி: அம்மா, பேரரசி ரேவா தன் மகனிறந்த வெந்துயரால் வாடித் தன் உயிரை விட்டு விட்டாள்.

(போகிறாள்)

லைலா: அந்தோ, ரேவா. நீ ஒரு தெய்வம். செயலற்ற பதுமைத் தெய்வம்! உன் பெயர் நீடூழி வாழ்க.

(போகிறாள்.)

சஹ:போர் என்ற ஒன்று உலகில் என்று ஒழியும்? அழகான காட்சிகள் உலகிலிருக்கின்றன. கவிதையுள்ளமற்ற இந்த மக்கள் சோலையில் உலாவுவதை விட்டு அதில் கண்ணீரும் செந்நீரும் சிந்தி மடிகிறார்களே. என்னே பேதமை!

காட்சி 21

(மேவாரைச் சார்ந்த உதயப்பூர் ராணா கர்ணாசிங் கொலுவிருக்கை; ஷாஜஹான்.)

ஷா: புகழ்மிக்க ராணா! மகபத்கானுடைய வீரத்தாக்குதல் எனக்கு மாநிலமெங்கும் நிற்க இடமின்றி என்னை வேட்டை யாடுகிறது. தில்லியில் தோற்று தெக்காணம்! தெக்காணத்தில் தோற்று வங்கம்! வங்கத்தில் படை முழுதும் இழந்து, நான் பரஹம்பூரைக் கைப்பற்றுமுன் அங்கும் வந்து என்னைத் துரத்தினான் மகபத். தங்களிடம் தான் தஞ்சம் நாடுகிறேன்.