பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்த நூலைப் பற்றி

ஆங்கில அறிஞர் ஆலிவர் கோல்டுஸ்மித் தீட்டிய இரு நாடகங்களுள் இதுவும் ஒன்று. இந்நூல் ஆங்கிலத்தில் புகழ்பெற்ற ‘She Stoops To conquer' என்ற நாடகத்தின் தமிழாக்கமேயாகும்.

ஆங்கில நாடக மரபுப்படி, பொதுவாக நாடகங்களை இன்பியல் நாடகமென்றும் துன்பியல் நாடகமென்றும் இரு பிரிவாகப் பிரிப்பார்கள். அவற்றுள் இந்நாடகம் இன்பியல் பகுதியைச் சேர்ந்தது. அக்காலத்தில் இன்பியல் நாடகமென்றால் கோமாளிக் கூத்துக்கள்தாம் மிகுதியாக இருக்கும். அதற்கு முற்றிலும் மாறாகச் சமுதாயத்தை ஒட்டிய குடும்ப நாடகமாக இது அமைந்திருக்கிறது முற்றும் கற்பனை நாடகமாயிராமல், வாழ்க்கையைப் பிரதிபலித்துக் காட்டும் ஒரு காலக் கண்ணாடி யாக இது விளங்குகிறது. இத்தகைய நாடகங்களை முதன்முதல் மேடைக்குக் கொண்டுவந்த பெருமை ஷெரிடன், கோல்டுஸ்மித் ஆகிய இருவரையுமே சாரும்.

‘விக்கார் ஆப் வேக்பீல்டு' (Vicar of Wakefield) தலை சிறந்த குடும்பப் புனைகதை, 'மாமனார் வீடு' ஒப்பற்ற நாடகம் இரண்டும் இலக்கியத் தராசில் ஒரே நிறைபெறுவன இரண்டிலும் ஆசிரியரின் வாழ்க்கைக் குறிப்புகள் நிறைய இடம்பெற்றுள் என்று சொல்லலாம்.

கலை கலைக்காக மட்டுமல்ல, வாழ்க்கையின் நிலையையும் படம் பிடித்துக் காட்ட வேண்டுமென்பதே இந் நூலாசிரியரின் நோக்கம். சிறந்த இக்குறிக்கோள் தமிழ் நாட்டவருக்குப் புதிதல்ல. புராணகாலக் கற்பனை களை விட நிகழ்காலத்தை ஊடுருவிப் பார்க்கும் சமுதாயச் சிற்பங்களையே, நாடக ஓவியங்களையே மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்கிறார்கள். எனவே 'விருந்து' இரண்டாம் புத்தகமாக இந் நகைச்சுவை நாடகம் வருகிறது. ஆங்கில மொழி வழக்கிற்கும் தமிழ் உரைநடை வழக்கிற்கும் அதிக