பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

7

சிறப்பு உடையது! இதோ பார், டாரதி! நீ கூட ஒரு பழைய மனைவிதான் உனக்கு வயதாகி விட்டாலும் நான் உன்னை இன்னும் என் பழைய டாரதியாகத்தான் பாவித்து நடத்துகிறேன்.

L

திருமதி ஹா: போதுமே உங்கள் டாரதியும் பழைய மனைவியும் எல்லாம் பேசி மெழுகுவதுதான்! ஒரு நல்ல புத்தாடை, ஒரு நல்ல நகைநட்டு உண்டா? அதுதான் போகட்டும். பழமைப் பற்றுக் காரணமாக நீங்கள்தான் கிழட்டு வேதாந்தத்தையும் கிழத்தனத்தையும் வருந்தி வரவழைக்கிறீர் களென்றால், என்னையும் வயது வந்தவள், வயது வந்தவள்' என்று பழிப்பானேன்? நீங்கள் சொல்வதைக் கேட்டு என்னை மற்றவர்கள் கிழவி என்று நினைத்துக் கொள்வார்கள்.

திரு.ஹா: ஏன், உனக்கென்ன இருபது முப்பதா நடக்கிறது?

திருமதி ஹா: இருபது முப்பது அல்ல. இன்னும் ஒரு பத்து இருக்கலாம். என் தமக்கை மகன் டானி பிறக்கும் போது எனக்கு வயது இருபது. அவனுக்கு இன்னும் ஆமான வயது ஆகவில்லை. அவனுக்கு இருபது வந்தால்தான் எனக்கு நாற்பது ஆகும்.

திரு.ஹா : இருபதும் இருபதும் சேர்ந்துதான் உனக்கு ஐம்பத்தேழு ஆகிறது போலிருக்கிறது. இருபதைக் கண்டு உன் வயதும் சற்று நீள இளைப்பாறியிருக்க வேண்டும். உன் பிள்ளை டானிக்கும் இப்போது பதினெட்டுக் கடந்து சில பல ஆண்டுகளாகியும், இருபது ஆக்காமல் வைத்துக் கொண்டிருக் கிறோம். சரி, சரி எப்படியாவது போ, நீ அவனைக் கோவேறு கழுதையாக்கி வைத்திருக்கிறாய்.படிக்க வேண்டிய வயதில் அவன் கண்ட கேளிக்கை விடுதிகளிலெல்லாம் சுற்றிக்கொண்டு திரிகிறான்.

(டானி ஆர்ப்பரித்துக் கொண்டு வருகிறான்)

திருமதி ஹா: வாடா கண்ணே! நீ வீட்டிலேயே இருப்ப தில்லை என்று உன் பெரியப்பா குறை கூறுகிறார். இப்படி அம்மா அப்பாவுடனிருந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாலென்ன?

டானி: அதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை. என் நண்பர்கள் எனக்காக 'முப்புறா' விடுதியில் காத்துக் கொண்டிருப்பார்கள். நான் போக வேண்டும்.