பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8||--

அப்பாத்துரையம் - 23

திருமதி ஹா: சற்று இருந்துவிட்டுப் போ, அப்பா.

(கையைப் பற்றுகிறாள்.டானி கையை இழுத்துக்கொண்டு போகிறான்)

டானி: (திருமதி ஹார்ட்காசிலை இழுத்தபடி) விடு,அம்மா, விடு, நானென்ன பழம்பஞ்சடைந்த சோம்பேறியா, உங்களைப் போல வீட்டிலே அடைந்துகிடக்க?

(இருவரும் மறைகின்றனர்.)

திரு.ஹா: (தனக்குள்) பிள்ளையைக் கெடுக்கிறாள் தாய். தாயைக் கெடுக்கிறது பிள்ளை. மறைவுற்ற அவன் தாயின் செல்வம் அவன் தந்தையைச் சோம்பேறி யாக்கிற்று. இப்போது அது மகனை ஊதாரியாக்குகிறது.எப்படியாவது போகட்டும். காலம் பொதுவாகச் சீர்கெட்டு வருகிறது. பாழும் லண்டன் மூலமாக ஃபிரெஞ்சு நாட்டின் புதுமைப்பூக்களும் பொய்மைகளும் நம் பழைய இங்கிலாந்தைக் கெடுத்து வருகின்றன. என் செல்வி கேட் கூட இந்தக் கால மாயையில் சிக்கி வருகிறாள்.

(செல்வி கேட் வருகிறாள்.)

(தனக்குள்ளேயே ஆ, அதோ வருகிறது என் பட்டுக் குஞ்சலப் பொம்மை! இப்போதும் அவள் உருத் தெரியாதபடி பட்டு ஆடை அணிந்து தான் வருகிறாள். (வெளிப்படையாக) ஏனம்மா, இந்தச் சிறுவயதில், இத்தனை வல்லா வட்டா? உடலை மறைக்க முழு ஆடை இல்லாத எத்தனையோ ஏழை மக்கள் நாட்டில் இருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் ஆடை வாங்கித் தரப் போதிய விலையுள்ள இந்தப் பகட்டுடை எதற்கம்மா?

செல்வி கேட்: அப்பா, நீங்கள் உங்கள் ஒப்பந்தத்தை மறந்து பேசுகிறீர்கள். காலையில் என் மனம் போல் உடுப்பது. மாலையில் உங்கள் மனம்போல் உடுத்திக் கொள்வது என்பதை மறந்து விட்டீர்களா?

திரு.ஹா: சரி சரி. காலையில் பின்பற்றும் கட்டுப்பாட்டை மாலையில் மறந்துவிடாதே. அதிலும் உன் கட்டுப்பாட்டை வலியுறுத்த இன்று ஒரு தனி அவசியம் ஏற்பட்டிருக்கிறது.