பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

செல்வி கேட்: அது என்னப்பா?

9

திரு.ஹா: என் பழைய நண்பன் திருத்தகை சார்ல்ஸ் மார்லோபற்றி நான் அடிக்கடி சொல்லக் கேட்டிருப்பாயே! அவர் புதல்வன் மார்லோ இப்போது வயதுவந்தவன். அவன் உன்னைப் பார்க்க வருகிறதாக எழுத்து வந்திருக்கிறது. எதற்காக என்பதை நீ ஊகித்துக்கொள்வாய் என்று எண்ணுகிறேன்....

(செல்வி கேட் சிறிது புன்முறுவலுடன் தலைகவிழ்ந்து கொண்டு நிற்கிறாள்.)

.. திருத்தகை சார்ல்ஸும் பின்னாடியே வந்து உடனிருந்து எல்லா ஏற்பாடுகளையும் செய்வதாக எழுதியிருக்கிறார்.

செல்வி கேட்: அதற்குள்ளாகவா அப்பா! இப்படித் திடுமென்று சொன்னால், அதற்கிசைய நான் எப்படியப்பா நடந்துகொள்ள முடியும்? இந்த அவசரத்தினால் என்னைப் பிறருக்குப் பிடிக்காமல் போய்விடலாம்; அல்லது ஒரு சமயம் எனக்கே அவனைப் பிடிக்காமலும் போகலாம். மேலும் நீங்கள் செய்யும் இந்த ஆசார முறைகளில் மனமொத்த நட்புக்கோ அன்புணர்ச்சிக்கோ இடம் இருக்க முடியுமா, அப்பா!

திரு ஹா : நீ அப்படி ஒன்றும் அஞ்சவேண்டாம், குழந்தாய்! உன் விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடந்து விடாது. உன் குணமும் அவன் குணமும் அறிந்து இருவரும் ஒத்து இசைந்து கொள்வீர்களென்று எதிர்பார்த்தே இந்த ஏற்பாட்டைச் செய்கிறோம். மார்லோ நல்ல கல்வி கற்றவன். நீயும் படித்தவள் இருவரும் கட்டாயம் ஒத்துப் போவீர்கள்.

செல்வி கேட் : ஊம்.

திரு.ஹா: மார்லோ நல்ல வீரமுடையவன்; நல்ல பெருந்தன்மையான குணம்.

செல்வி கேட்: சரி.

திரு.ஹா: அத்துடன் அந்த சந்தமானவன்.

செல்வி கேட்: அப்படியானால் அவரை எனக்குப் பிடிக்கும்

அப்பா.

திரு.ஹா: ஆனால்-