பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10

அப்பாத்துரையம் - 23

செல்வி கேட்: ஆனால் என்ன அப்பா!

திரு.ஹா: அவன் மிகவும் அமைதியும் கூச்சமும் டயவனாம். பெண்களிடம் எப்படிப் பேசுவதென்றே அவனுக்குத் தெரியாதாம். இது ஒரு குற்றமல்ல- குணம் என்றுதான் நான் நினைக்கிறேன்.

செல்வி கேட்: குணமா? அத்தனை குணங்களையும் இந்தப் பெருங் குற்றம் கெடுத்து விடுகிறதே அப்பா. எனக்கு அவரைப் பிடிக்காது. வேண்டாம் அவர்.

திரு.ஹா: அவசரப்படாதே அம்மா. நீ சிறுமி. என் அனுபவத்தைக் கேள். கூச்சப்படுதல் ஒழுக்கத்திற்கு ஒரு நல்ல அடையாளம்; உயர்ந்த கருத்துக்களுக்கு குடிகொண்டிருக்கும் நாணம் ஒரு சின்னம்.

அவனிடம்

செல்வி கேட்: அப்பா, உங்கள் வேதாந்தம் இருக்கட்டும். மற்றவை எல்லாம் சரியாக இருந்தால், இந்த ஒரு குற்றத்தை நாளாவட்டத்தில் சரிப்படுத்தி விடலாமல்லவா? அநேகமாக அவர் எனக்குப் பிடித்த மாயிருக்கலாம் என்றே எண்ணுகிறேன்.

திரு.ஹா: அது சரி. ஆனால் அவனுக்கு உன்னைப் பிடிக்காமல் போய்விடப்போகிறது. ஆகவே சற்று விழிப்பா யிருந்துகொள்.நான் போய் மற்ற அலுவல்களைக் கவனிக்கிறேன்.

(செல்கிறார்.)

செல்வி கேட்: (தனக்குள்) அவருக்கல்லவா என்னைப் பிடிக்காமல் போய்விடப் போகிறதாம்! நான் அழகுபடுத்திக் கொள்வது பிடித்தமில்லை- அவர் வெறுத்து விடுவாரோ என்ற அச்சம்.அப்பப்பா இந்த ஆண்கள், அதிலும் பெற்றோர்கள்... அவர் குணங்களை முதலில் கூறி, அழகைக் கடைசியில் கூறுவானேன்? அங்கேயும் பெற்றோரின் பேதமை! அழகை யல்லவா முதலில் சொல்லவேண்டும்! பெண்களுக்கு மற்றவையெல்லாம் அதற்கப்புறந்தான். சரி, இனிநான் ஆடை உடுத்திக் கொள்வதில் முனைந்து கவனஞ் செலுத்த வேண்டும். (செல்வி நெவில் வருகிறாள்.)

செல்வி நெவில்: என்னடி கேட், இப்படி ஆழ்ந்த ஆராய்ச்சி யிலிருக்கிறாய்? என்ன நேர்ந்தது? உன் பூவைகளிடையே பூனை