பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

L

11

புகுந்து விட்டதா? அல்லது அந்தக் கோமாளி டானி ஏதாவது குறும்பு செய்து தொல்லை கொடுத்தானா?

செல்வி கேட்: நெவில், இன்று உன் கற்பனைகள் எதுவும் பயன்படாது. என்னை அச்சுறுத்தும் பொருள் பூனையுமல்ல, டானியுமல்ல; மற்றொரு புதுமாதிரி உயிரினம்; என் மீது அப்பா ஒரு காதலனை ஏவிவிடப் பார்க்கிறார்!

செல்வி நெவில்: காதலனா, யாரடி அது?

செல்வி கேட்: இப்போது எனக்கெப்படித் தெரியும்?

செல்வி நெவில்: பெயர்?

செல்வி கேட்: மார்லோவாம்.

செல்வி நெவில்: யாரது, மார்லோவா?

செல்வி கேட்: ஆமாம். திருத்தகு சார்ல்ஸ் மார்லோவின் புதல்வர்.

செல்வி நெவில்: அப்படியா! கேட், இது எனக்கு நல்ல சந்தர்ப்பம்! என் காதலர் ஹேஸ்டிங்ஸுக்கு அவர் நண்பர்; இணைபிரியாத் தோழர். உன் தயவால் நானும் என் காதலரைக் காணப்போகிறேன்!

செல்வி கேட்: நெவில், எல்லோரையும் போல நீயும் ஏன் கவலைப்படுவதாக நடிக்கிறாய்? ஹேஸ்டிங்ஸ் உன்னைக் காதலிக்கிறார். நீ அவரைக் காதலிக்கிறாய். உனக்குப் பெற்றோர்களுமில்லை. வயது வந்தால் உன் விருப்பப்படியே மணமும் செய்து கொள்ளலாம்.

செல்வி நெவில்: நீ சொல்வது உண்மைதான், கேட்.எனக்கு இன்னும் வயது வராததால் உன் அம்மாவுக்கு அடங்கியிருக்க வேண்டியிருக்கிறது. என் தந்தையாகிய அவன் தமையனார் என்தாயின் நகைகளை அவள் கையில் ஒப்படைத்துவிட்டார்.தன் தமக்கை மகன் டானியை மணந்தால்தான் அதைக் கொடுப்பதாக உன் அம்மா பிடிவாதம் செய்கிறாள். இவ்வளவும் உனக்குத் தெரியும். இருந்தும்... எனக்கு என்ன கவலை என்கிறாய். உனக்குக்கூட நான் அவ்வளவு இளக்காரமாய்ப் போய் விட்டேன், இல்லையா?