பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

அப்பாத்துரையம் - 23

செல்வி கேட்: நெவில், கவலைப்படாதே. எல்லாம் விரைவில் சரியாகிவிடும். இப்போது அவர்கள் வருவதற்கு முன் நான் உடைகளைச் சரிசெய்து கொள்ள வேண்டாமா?

செல்வி நெவில்: சரி வா, நம் அறைக்குப் போவோம்.

(இருவரும் செல்கின்றனர்.)

களம் 2.

(முப்புறா விடுதியில் நீண்ட மேஜையைச் சுற்றிலும் உள்ள ஒடிந்த நாற் காலிகளில் தாறுமாறாகக் கந்தலாடை அணிந்துள்ள இளைஞர்கள் இருக்கின்றனர் அனைவர் கரங்களிலும் மதுக்கிண்ணங்கள்! உயர்ந்த முதுகற்ற ஆசனத்திலிருந்து டானி லம்ப்பின் பாடுகிறான். மேடையின் மேல் ஒரு பெரிய கருநிறமுள்ள பீப்பாய் நிறைய மது வைக்கப் பட்டிருக்கிறது. நேரம் பிற்பகல்.)

டானி: தன்னான தானன்னா தானதன தன்னா

தனதானா தனதானா தன்தானா தன்னா!

எல்லோரும்: தன்னான...

டானி: அண்ணாவி மார்களெல்லாம் ஆர்ப்பரிக்கட்டும். ஆண்பாலும் பெண்பாலும் அளந்து கொட்டட்டும்!

கண்ணான பாடம் இங்கே நாம் படிக்கும் பாடம்

கலத்தோடு கலம் மோதிக் கலகலக்கும் பாடம்!

எல்லோரும்: (கூடவே) தன்னான்.

டானி: கண்ணோரம் பார்க்கின்ற காரிகையார் அழகைக் கலத்திலே தெளிதேறல் வண்ணத்தில் கண்டே எண்ணாத எண்ணங்கள் எண்ணிடுவோம் நாமே

ஏடறியாப் பாட்டியற்றிப் பாடிடுவோம் நாமே!

எல்லோரும்: (கூடவே) தன்னான...

ஒருவன்: ஆகா! என்ன பாட்டு!

டானி: பஞ்சடைத்த கோயிலிலே நெஞ்சடைத்த பேர்கள்

டத்துக் குடிபழித்துப் பேசிடட்டும்! அவரும்