பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

கொஞ்சமிதைக் குடித்த பின்பு பேசிப் பார்க்கட்டும்! குதித்த மொழி கடகடெனக் குரைத்திடுதல் காண்பார் எல்லோரும்: (கூடவே) தன்னான...

13

மற்றொருவர்: அடாடா, பாட்டுன்னா இதுல்ல பாட்டு!

நம்ம டானி துரை கவிஞருடா, கவிஞரு! உட

கட்டுறாரு பாரு, பாட்டு...!

உடனுக்குடனே

டானி: வருந்துபவர் வருத்தமெல்லாம் போக்கடிக்கும் மருந்து

வாழவழி யற்றவர்க்கு வாழ்வளிக்கும் மருந்து!

அருந்துபவர் அல்லல்களை மறக்கடித்து, மேலாம்

அருங்கனவுப் பொன்னுலகைக் காட்டுகின்ற மருந்து!

எல்லோரும்: (கூடவே) தன்னான...

சில இளைஞர்: நம்ம டானி துரைக் கவிஞருக்கு எந்தக் கவிஞரும் ஈடில்லைடா! அவர் பாட்டிலே எழுத்துக்கு எழுத்து தங்கக்கட்டி தரலாண்டா!

இன்னொருவர்: அவர் கவிஞர் மட்டுமில்லை அண்ணே. அவர் நம்ம வள்ளல். அந்தக் கிழவி மட்டும் பருவ வயதைக் கடத்திக்கட்டுப் போகாட்டி அவரிப்போ பட்டமேறிப் பெரிய வல்லரசா யிருப்பாரண்ணே!

எல்லோரும்: நம் கவிஞர், நம் வள்ளல் டானிலம்ப்கின் துரை அவர்கள் கவிதைக்கும் வள்ளல் தன்மைக்கும் கரங்கொட்டி முழக்கி மது அருந்துவோம்! வாழ்க கவிஞர் டானி! வாழ்க வள்ளல் டானி! வாழ்க நறுந்தேறல்!

(குடித்து ஒருவரையொருவர் கட்டித் தழுவுகின்றனர்)

டானி: (தனக்குள்) தேறல் தரும் தோழமை இனிது.மிகமிக இனிது. ஆனால் இந்த ஏழைகள் அதில் அழுந்தி விடுகிறார்கள். பாவம், வயிற்றுக் கில்லாமல் கடுமையாக உழைத்த அயர்வில் குடி அவர்கள் தலைக்கு வெளியேற்றி விடுகிறது. சரி, (விடுதிக்காரர் வருகிறார்) என்ன அண்ணா, என்ன சேதி?

விடுதிக்காரர்: ஒன்றுமில்லை, அண்ணா. இங்கு யாரோ இரண்டு இளைஞர்கள்- நல்ல மனிதர்களாகத்தான் தெரிகிறது- வண்டியில் யில் வந்து இறங்கி உங்கள் பெரியப்பா பேர் கூறி