பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(14) ||.

அப்பாத்துரையம் - 23

வழிகேட்கிறார்கள். உங்களை ஒரு வார்த்தை கேட்டுவிட்டு மறுமொழி தரலாமென்று இங்கே வந்தேன்.

டானி: நீங்கள் செய்தது மிகவும் நல்ல காரியம். அவர்கள் பெரும் பாலும் பெரியப்பா வீட்டுக்கு வர இருக்கும் புதுமாப்பிள்ளை வகையறா வாகத்தான் இருக்க வேண்டும். அலைக்கழித்துக் கொண்டிருக்கும் அந்தக் கிழங்களுக்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க இது சரியான சந்தர்ப்பம். நீங்கள் மட்டும் என் பேச்சுக்கு மாறாக எதுவும் இடையிலே சொல்லாமலிருக்க வேண்டும், தெரிந்ததா?

விடுதிக்காரர்: சரி, அப்படியே ஆகட்டும். அவர்களை வரச் சொல்லலாமல்லவா?

L

டானி: ஆம். வரச்சொல்லுங்கள். (விடுதிக்காரர் செல்கின்றார்; தனக்குள்) ஆகா, சந்தர்ப்பம் எனக்களிக்கும் வாய்ப்பு எவ்வளவு பொருத்தமாய் அமைந்திருக்கிறது.பாட்டுக் கட்டி என் நண்பர்களை மேய்ச்சல் காட்டுவதை விட இது எவ்வளவு ஒய்யாரமான வேடிக்கை!

(விடுதிக்காரருடன் மார்லோவும் ஹேஸ்டிங் ஸும்

வருகின்றனர்.)

விடுதிக்காரர்:

இதோ நம்

வழிப்போக்கர்கள்

வந்திருக்கிறார்கள், அண்ணா!

டானி: அப்படியா, மகிழ்ச்சி! (வந்தவர்களை நோக்கி) அன்பர்களே! நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கே போகவேண்டும்?

ஹேஸ்டிங்ஸ்: ஐயா, நாங்கள் தொலைவிலிருந்து வருகிறோம். என் பெயர் ஹேஸ்டிங். இவர் என் நண்பன் மார்லோ. நாங்கள் திரு. ஹார்ட் காசிலின் பண்ணை மனைக்குப் போக வேண்டும்.

டானி: இப்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

ஹேஸ்: தெரியாது.