பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

15

டானி: அப்படியானால் நீங்கள் வழி தவறிவிட்டீர்கள் என்பதை நான் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

மார்லோ: அதுதான் சொல்லாமல் விளங்குகிறதே!

டானி: ஓகோ அப்படியா சரி. அப்படியானால் வழியும் சொல்லாமல் விளங்கட்டும். நான் போகிறேன்.

ஹேஸ்: சும்மா இரு, மார்லோ. (டானியை நோக்கி) ஐயா, சினம் வேண்டாம். எங்களுக்கு நல்ல வழியை விளக்கும்படி கோருகிறேன்.

டானி:டானி காட்டும் வழி எப்போதும் நல்ல வழிதான்! ஹேஸ்: ஆகா! சொல்லுங்கள்.

டானி: நீங்கள் காணவிரும்பும் திரு. ஹார்ட் காசில் ஒரு வயது சென்ற கஞ்சப்பேர்வழிதானே? அவருக்கு அழகு, இளமை, படிப்பு, காரியம், நல்ல குணம் ஆகியவை இல்லாத ஒரு பெண்ணும், சாந்தமான நாகரிகமுள்ள நற்குண ஆண் மகன் ஒருவனும் இருக்கிறார்களல்லவா?

மார்லோ: திரு. ஹார்ட்காசில் நல்லவரென்றும், அவர் பெண் அழகும் குணமுடையவள் என்றும்தான் நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். மகன்தான் ஊதாரி, ஊதாரி, கெட்ட நடத்தையுள்ளவன் என்று கேள்வி...

டானி: (தனக்குள்) ஓகோ, இவன்தான் புது மாப்பிள்ளை போலும். முறுக்கோடு பேசுகிறான். சரி நான் ஒருகை பார்க்கிறேன். (வெளிப் படையாக) யாரையா நீ, தரங்கெட்ட பேர்வழியாயிருக் கிறாய். வழி தெரிந்து வைத்திருப்பது மாதிரித்தான் ஆட்களைப் பற்றியும் தெரிந்து வைத்திருக் கிறாய். போ. உனக்கு நான் வழிகாட்ட முடியாது.

ஹேஸ்: என்ன மார்லோ, சிறுபிள்ளைமாதிரி நடந்து கொள்கிறாய்? (டானியை நோக்கி) ஐயா, நீங்கள் கூறுவதுதான் உண்மையாக இருக்க வேண்டும். ஒருவரைப் பார்க்குமுன் அழகும், குணமும் எங்களுக்கு எப்படித் தெரியும். நீங்கள் திரு. ஹார்ட்காசில் மனைக்குப் போகும் வழி..