பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

அப்பாத்துரையம் - 23

டானி: அப்படிச் சொல்லு. சரி, நான் காட்டுகிறேன். அது அருகில் இல்லையே. அது தொலைவில் படுகர்ப்பள்ளத் தினருகில் இருக்கிறது. அதற்குப் போகும் வழியிலிருந்து நெடுந்தூரம் தவறான வழியில் வேறு வந்து விட்டீர்கள்.

ஹேஸ்: நேர்வழி செல்வது எப்படி என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

டானி: நீங்கள் வரும் வழியில் ஒரு மலையடிவாரத்தைப் பார்த்தீர்களா?

ஹேஸ்: ஆமாம்.

டானி: அதிலிருந்து நேர்மேற்கே ஒரு வழி செல்லுகிறது. அதன் வழியே செல்லாமல் நீங்கள் கிழக்கே நெடுந்தூரம் வந்துவிட்டீர்கள் இனி நீங்கள் மேற்கு முகமாகப் போய், வடக்கே திரும்பி, அதிலிருந்து கிழக்காகவும் அதன் பின் மீண்டும் வடக்காகவும் திரும்ப வேண்டும். அப்போது தான் நேர்வழி செல்லலாம்.

மார்லோ: அப்பாடா..! சரி, அதன் பின்?

டானி: அதற்குப் பின் கொஞ்ச தூரம் செல்ல வேண்டும். நாலு பாதைகள் சந்திக்கும் இடம் ஒன்று வரும். அந்த நாலு பாதைகளில் ஒரு பாதை வழியாகத்தான் செல்ல வேண்டும். மற்ற பாதைகளில் செல்லக் கூடாது.

மார்லோ: அந்த ஒரு பாதை எது?

டானி: ஏனையா அதற்குள் அவசரம்? வந்த பாதையும் விட்டு அதற்கு நேர் எதிர்பாதை, இடதுபுறப் பாதை ஆகியவற்றையும் விட்டுவிட்டு, வலதுபுறம் செல்லும் பாதையைப் பின்பற்ற வேண்டும். பிறகு அதிலிருந்து பிரிந்து ஒரு வண்டிப் பாதை போகிறது. அதன் வழியாக நெடுந்தூரம் போய் மண்டையுடைத்தான் திடலை அடைய வேண்டும். அங்கிருந்து பிரியும் கிளைப்பாதையில் சென்றால் முரேன் களஞ்சியம் வரும். பின் இடது புறமாகத் திரும்பி அப்புறம் வலதுபுறமாகப் போய், அதற்கப்புறம் மீண்டும் இடதுபுறமாகத் திரும்பிச் சென்றால் உங்கள்முன் ஒரு மாவாலை தெரியும். அதைக் கடந்து விட்டால் ஹார்ட்காசில் பண்ணை மனை உங்கள் கண்முன் படும்.