பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

17

மார்லோ: சரிதான்.நாசமாய்ப் போச்சு. நீங்களும் உங்கள் வழியும் வழி விளக்கமும்..

L டானி: நீங்கள்தானே ஐயா, வழியை விளக்கும்படி கேட்டீர்கள்.

ஹேஸ்: மார்லோ, பேச்சை வளர்க்காதே. ஆக வேண்டிய காரியத் தைப் பார்ப்போம். (டானியை நோக்கி) ஐயா, நீங்கள் சொல்லும் வழியின் நீளத்தைப் பார்க்க இன்று பொழுது போவதற்குள் பண்ணை மனை போய்ச் சேர முடியுமென்று தோன்றவில்லை. ஆகையால்...

டானி: நீங்கள் கூறுவது உண்மையே. மேலும் இவ்வழியில் திருடர், கொள்ளைக்காரர் தொல்லை நிரம்ப உண்டு. அவர்கள் கத்தி, ஈட்டி, துப்பாக்கி வைத்துக் கொண்டு எங்கும் மறைந்திருப்பார்கள்.

மார்லோ: (நடுக்கத்துடன்) இனி என்ன செய்வது, ஹேஸ்டிங்ஸ்?

ஹேஸ்: பொறு, மார்லோ! (டானியை நோக்கி) இரவு தங்கிப்போக இடமிருந்தால் நலம் என்று எண்ணுகிறேன்.

விடுதிக்காரர்: இங்கே...

டானி: (முறைத்துப் பார்த்து) நீங்கள் கூறவேண்டியதை நானே கூறிவிடுகிறேன். (வழிப்போக்கர்களைப் பார்த்து) ஐயா, இங்கே மூன்று அறைகள்தாம் வழிப்போக்கர் தங்க இருக்கின்றன. மூன்று அறைகளிலுள்ள ஐந்து படுக்கைகளில் பத்துப்பேர் வந்து நிரம்பிவிட்டார்கள். அதுவுமல்லாமல் படுக்கைக்குக் கீழே சிலரும் படுத்திருக்கிறார்கள். மூட்டைப்பூச்சியும் இங்கே கொஞ்சம் அதிகம். அதனால் உங்களைப் போன்றவர்கள் இங்கே தங்க முடியாது.

(விடுதிக்காரர் முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விடுகிறார்.) ஹேஸ்: சரி, வேறு நல்ல விடுதி ஏதாவது...?

டானி: இப்பக்கத்தில் இல்லை. ஆனாலும் ஒரு எட்டுத் தொலைவில் ஒரு முதல்தரமான விடுதி இருக்கிறது. உங்களைப் போன்றவர்கள் அதில் ஒருவேளை தங்க அனுமதிக்கப்படலாம்.