பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

அப்பாத்துரையம் - 23

மார்லோ: அதென்ன இடையிலே தனிப்புதிர்?

டானி: ஒன்றுமில்லை. அதன் மேலாளருக்குச் செல்வம் அதிகம் சேர்ந்துவிட்டது. அதனால் இப்போது பெரிய மனிதர் ஆகப்பார்க்கிறார். அரசாங்கப் பட்டம், தேர்தல் முதலானவை களுக்கு அடிபோட்டுக் கொண்டிருக்கிறார். ஆகவே விடுதிக்காரர்போல் நடந்து கொள்ள மாட்டார். விருந்தினருடன் பழகுவது போலச் சரிசமமாகப் பழகுவார்.

ஹேஸ்: ஐயா, இப்பிரயாணத்தின் போது எங்களுக்கு ஆயிரம் புதிய அனுபவங்கள்! அவற்றுள் இதுவும் ஒன்றாக இருக்கட்டும். அங்கேயே செல்லுகிறோம். அவ்விடுதிக்கு நீங்கள் வழிகாட்டலாம்.

டானி: அதோ அந்த மேட்டின் உச்சியில் ஒரு கட்டடம் தெரிய வில்லையா? அதுதான். நீங்கள் போகலாம். அந்த விடுதிக்காரர் உங்களை ஒரு மாமனார் வரவேற்பது போல் வரவேற்று, மாப்பிள்ளையை நடத்துவது போல் உபசரிப்பார். ஹேஸ்: நன்றி, நாங்கள் வருகிறோம் (போகிறார்கள்)

டானி: (தனக்குள்) சரியாக மாட்டிக் கொண்டார்கள். பட்டிக் காட்டைப் பார்க்கவந்த பட்டணத்தைச் சரியான பட்டிக்காடாக்கிவிட்டேன். இனி நானும் மறைந்திருந்து எல்லாக் கூத்துக்களையும் அனுபவிக்கலாம்.

இரண்டாம் காட்சி

களம் 1.

(சூழ நின்று கொண்டிருக்கும் வேலைக்காரர்களுடன் திரு ஹார்ட்காசில் கலந்து பேசிக்கொண்டிருக்கிறார். நேரம்

மாலை.)

திரு.ஹா: நான் சொன்னதெல்லாம் நினைவிருக்கிறதா? பிழையேதும் நேர்ந்துவிடாமல் அவரவர்களுக்கு இடப்பட்ட கட்டளைகளை ஒழுங்காக நிறைவேற்ற வேண்டும்.

எல்லோரும்: அப்படியே செய்கிறோம்.