பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

19

திரு.ஹா: வருகிறவர்களில் ஒருவர் நம் மனைக்கு மாப்பிள்ளையாக வரப்போகிறவர். மற்றவர் அவர் தோழர். எப்போதுமே

நீங்கள்

நாகரிக மக்களுடன் பழகிக்

கொண்டிருப்பவர்கள் என்பதை உங்கள் நடத்தையின் மூலம் காட்ட வேண்டும். அப்போதுதான் அவர்கள் நம்மை மதிப்பார்கள். (வண்டிவரும் ஓசை கேட்கிறது) இதோ அவர்கள் வந்துவிட்டார்கள். எல்லோரும் அவரவர் இடங்களுக்குச் செல்லுங்கள். நான் போய் வர வேற்கிறேன். (ஒன்றிரண்டு வேலைக்காரர்களுடன் வெளியே செல்கிறார்.)

உன் இடம் இதுவல்ல. நீ வாசலுக்குப்

டிக்கரி: போய்க்காத்துநில்.

ரோஜர்ஸ்: என் இடம் எனக்குத் தெரியும். நீ சும்மா கனைக்காதே. அதோ அவர்கள் வந்துவிட்டார்கள்.

(மார்லோவும் ஹேஸ்டிஸ்ஸும் உள்ளே வருகிறார்கள். பின்னால் திரு.ஹார்ட் காசில் பரபரப்புடன் தொடருகிறார்.)

திரு.ஹா: இளைஞர்களே, வண்டியிலிருந்து இறங்கும் போதே உங்களை வரவேற்றேன். நீங்கள் அதைக் கவனிக்காது வந்துவிட்டீர்கள். எளியேனின் இச்சிறு குடிசைக்கு உங்களை மட்டற்ற மகிழ்வுடன் மீண்டும் வரவேற்கிறேன்.

இரு வேலையாட்கள்: (முன்வந்து தலைதாழ்த்தி) வணக்கம், ஐயன்மீர்! வருக, வருக!

ஹேஸ்: (மூவர் வரவேற்பையும் மதியாது, மார்லோவை நோக்கி பகல் முழுதும் அலைந்த அலைச்சலுக்கு இராத்தங்கல் மோசமில்லை. கட்டடம் நன்றாக, இடமகன்றதாகவே இருக்கிறது. மேசைகளும், நாற்காலிகளும் ஒழுங்காகவே

அமைக்கப்பட்டிருக்கின்றன.

மார்லோ: ஆம். இந்தக் கட்டடமே தன் வரலாற்றை எடுத்துச் சொல்லுவது போலக் காட்சியளிக்கிறது. விருந்தினரை வரவேற்க அமைந்த கலைப்பண்பு, சிக்கன அறிவின் காரணமாகப் பணம் புரட்டுவதையே தொழிலாகக் கொண்ட மற்றொருவனின் கைக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

திரு.ஹா:(தனக்குள்ளாக) தன் பிள்ளை நாணமுடையவன், ஒழுக்க சீலன், அப்படி இப்படியென்று நண்பர் அளந்திருந்தார்.