பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

அப்பாத்துரையம் - 23

ஆனால் இங்கே அவர் பிள்ளையும், பிள்ளையின் நண்பரும் என் வரவேற்பைக்கூடக் கவனிக்காமல் தமக்குள் பேசிக்கொண்டே வருகின்றனர். உம்... இன்னும் பொறுத்துப் பார்ப்போம். (வெளிப்படையாக) அன்புடையீர், உங்களுக்கு என் அன்பு கலந்த வணக்கம். இதோ, இந்த நாற்காலிகளில் அமருங்கள்.

மார்லோ: (ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அதன் குறுக்கே உட்கார்ந்து கொண்டு) ஹேஸ்டிங்ஸ், நீயும் உட்கார். (தனிப்பட்ட ஹேஸ்டிங்ஸிடம்) இந்த விடுதிக்காரரின் வரவேற்பு ஆர்ப்பாட்டத்தைப் பார்த்தாயா?

ஹேஸ்: அந்தப் பருப்பெல்லாம் நம்மிடம் வேகாது. வரவேற்பை வானளாவத் தூவுவதெல்லாம் தொழில் தந்திரம்- அது நம்மிடமா?

மார்லோ: இந்த வரவேற்புக்கெல்லாம் சேர்த்து நம் பட்டியலில் பற்று எழுதினாலும் எழுதிவிடுவான்!

ஹேஸ்: சந்தேகமே வேண்டாம். இம்மாதிரிப் பேர்வழிகள் தாராளமாகச் செய்வார்கள். அவன் வேண்டுமானால் பெருமிதமாகப் பேசிக் கொள்ளட்டும். நாம் பெருமிதத்தோடு பேசப்போவதுமில்லை; அதற்காக நம் செலவுகளைப் பெருக்கிக் கொள்ளவும் விரும்பவில்லை. இதோ; இந்த வரவேற்பு வள்ளலுக்குக் கைவரிசையையும் கொஞ்சம் காட்டுகிறேன் பார். (நேரிடையாக திரு ஹார்ட்காசிலை நோக்கி) ஐயா, நீர் ஏன் வெறும் வாய் உபசாரம் செய்து நிற்கிறீர்? இரண்டு கோப்பைத் தேநீர் அளித்துக கையுபசாரம் செய்தால், அது இதை விட நலமாயிருக்குமல்லவா?

(திரு ஹார்ட்காசில் திகைப்படைந்து மார்லோ பக்கம்

திரும்புகிறார்.)

மார்லோ: ஆம், அன்பரே! ஒரு கோப்பைத் தேநீருக்கு நிகர் எதுவும் இல்லை! ஆயிரம் வரவேற்பைவிட ஒரு கோப்பைத் தேநீரே மேல் என்று நாங்கள் கருதுவோம். போம். கையுபசாரம் ஆரம்பமாகட்டும்.

திரு.ஹா: (தனக்குள்) ஆகா, எப்பேர்ப்பட்ட நாணம்! இவர்கள் நாணத்தைக் கண்டு நான்தான் வெட்கித் தலை குனியவேண்டும்! இப்பேர்ப்பட்ட மாப்பிள்ளைக்கா இதுநாள்