பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

21

வரை காத்திருந்தேன்? (வெளிப்பட) அப்படியே செய்கிறேன், அன்பர்களே!

(போகிறார்)

மார்லோ: பேர்வழி முறைப்பதைப் பார்த்தாயா? இவனுக்கு நாம் இம்மியும் விட்டுக் கொடுக்கக்கூடாது. இத்தகைய உருமாறிகளுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும்.

ஹேஸ்: ஆம். அந்த விடுதி இளைஞன் செய்த எச்சரிக்கை முற்றிலும் சரிதான். ஆனால் இவன் கொட்டத்தை மட்டந்தட்ட எனக்கா தெரியாது?

(வேலையாட்கள் மூன்று கோப்பை தேநீர் கொண்டு வந்து வைக்கின்றனர். அடுத்துப் பல்வேறு சிற்றுண்டித் தட்டுகள் வருகின்றன. திரு. ஹார்ட்காசில் வந்து அமருகிறார்)

திரு.ஹா: (ஒரு கோப்பைத் தேநீரைக் கையிலெடுத்து மார்கோவை நோக்கி) நீங்கள்தான் மார்லோ என்று நினைக்கிறேன்; உங்கள் நலத்திற்காக இந்தக் கோப்பையை அருந்துகிறேன். (ஹேஸ்டிஸ்ஸை நோக்கி) நீங்கள் மார்லோவின் நண்பர் ஹேஸ்டிங்ஸ் எனக் கருதுகிறேன். உங்கள் நலத்திற்காகவும் இதை அருந்துகிறேன்.

மார்லோ: (கண்ணைச் சிமிட்டிக்கொண்டே) நம் பேர்கள் இவனுக்கு எப்படித் தெரிந்தது?

ஹேஸ்: நம்

வேலையாட்கள்

நண்பர்களிடம் கேட்டு அறிந்திருப்பான்.

அல்லது விடுதி

மார்லோ: (மறைவாக) உடனிருந்து இவனை உண்ணவும் பேசவும் விடக்கூடாது. (திரு. ஹார்ட்காசிலை நோக்கி) ஐயா, உங்கள் உணவு மேசையிலிருந்தே உங்கள் தொழில் நயமும் வளமும் எங்களுக்குத் தெரிகிறது. பலே சமர்த்தரான தாங்கள்

ப்போது தேர்தல்களிலும், அரசியல் துறையிலும் உங்கள் கைவரிசையைக் காட்டப் புறப்பட்டிருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்.

திரு.ஹா: ஒருகாலம் அவற்றின்மேல் அக்கறை கொண்டி ருந்தேன். மார்ல்பரோக் கோமகன் காலத்திலெல்லாம்...