பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

||--

அப்பாத்துரையம் - 23

மார்லோ: (மறைவாக) நண்ப, பழங்கதை தொடங்குகிறது! காதுகள் பத்திரம்.

ஹேஸ்: ஓகோ, அரசியல் பொறுப்பைவிடச் சமூக வாழ்வின் இன்பம் நல்லதென்று கொண்டு அதை நாடுகிறீர்கள் போலிருக்கிறது.சிறிது பணமும் சேர்ந்து விட்டது. இனியென்ன கவலை? மாடியில் உண்டு பருகியும், கீழே படுத்து உருண்டும், உள்ளே விருந்தினரை வரவேற்றும், வெளியே சென்று விருந்தாடியும், வந்தால் வாழ்க்கையை இன்பமாகக் கழித்து விடலாம்!

திரு.ஹா: அன்பரே, தங்கள் கூற்று முற்றிலும் சரியல்ல. நான் பெரும்பாலும் வெளியே போவது கிடையாது. ஆனால் இந்தக் கூடந்தான் நான் சமூகத்தொண்டு செய்யும் மாளிகை. இந்த வட்டாரத்தின் வழக்குகள், பூசல்கள் எல்லாம் தீர்த்து வைக்கும் நீதிமன்றமும் இந்தக் கூடத்தில்தான் நடைபெறுகின்றது.

மார்லோ: ஓகோ சரிதான். உங்களிடந்தான் மன்ற வாதங்களை விட வலுவுள்ள தேநீர்வாதம் இருக்கிறதே, அது போதும் தங்களுக்கு.

திரு.ஹா: (சிறிது புன்முறுவலுடன்) முற்றிலும் தேநீர் வாதமல்ல; என் வாழ்க்கை வேதாந்தமும் சிறிது கலந்திருப்பதால் தான் என் தொண்டு எனக்கு வெற்றியைத் தேடித் தருகிறது.

மார்லோ: (மறைவாக) வாழ்க்கை வேதாந்தமா? நாசமாப் போச்சு; விடுதிக்காரனின் வாழ்க்கை வேதாந்தம் என்று நான் கேள்விப்படுவது இதுதான் முதல் தடவை?

ஹேஸ்: சரிதான், தேநீர்வாதத்தை முன்னணியில் அமைத்து, வாழ்க்கை வேதாந்தத்தைப் பின்னணியில் தாக்க விடுகிறீர் போலும்; நீர் தேர்ச்சிபெற்ற சரியான படைத் தலைவர்தாம்!

திரு.ஹா: படைத் தலைவன் என்றவுடனே நினைவுக்கு வருகிறது,- பெல்கிரேட் போரில் யூஜீன் கோமகன்...

மார்லோ: (மறைவாக) இவன் பேச்சை வளர்க்கிறான். வன் கதைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். (வெளிப்பட) ஐயா பெல்கிரேட் தாக்குதலைப் பற்றிக் கதையளக்க வேண்டாம். முதலில் எங்கள் பசித் தாக்குதலைப் பற்றிக்