பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

23

கொஞ்சம் சிந்தனை செய்யுங்கள். இந்தச் சிற்றுண்டி எங்கள் பசியைத் தணிக்க முடியாது. இராச் சாப்பாட்டுக்கு விரைவில் ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள்.

திரு.ஹா: (தனக்குள்) அட நாணமே. வெட்கங்கெட்ட இந்தத் தறுதலைத்தனம் நாணமென்று கூறப்பட்டால், நாணமற்ற நிலை எப்படியிருக்குமோ?

(செல்கிறார்)

ஹேஸ்: மார்லோ, இங்கே நடப்பதெல்லாம் புதிராகத்தான் இருக்கிறது. பொதுவாக விடுதிகளை மாமனார் வீடுகள் என்பார்கள். இங்கே பரிமாறப்படும் உணவுவகைகளையும், உயர்வையும் பார்க்கும் போது இது உண்மையிலேயே மாமனார் போலத்தானிருக்கிறது. பணமும் பட்டியலும்

வீடு

இல்லாவிட்டால்...

(திரு.ஹார்ட்காசில் வருகிறார்)

மார்லோ: ஐயா, நல்ல காற்றோட்டமான அறையில் எங்கள் படுக்கைகளை உதறி விரித்துத் தூய்மைப்படுத்த ஏதேனும் ஏற்பாடு செய்திருக்கிறீர்களா?

திரு.ஹா: தங்கட்கு அந்தக் கவலை வேண்டாம். வேலையாட்கள் எல்லாம் கவனமாகப் பார்த்துக் கொள்வார்கள்.

மார்லோ: இப்படிப்பட்ட காரியங்களிலெல்லாம் நான் வேலைக் காரர்களை நம்புவது கிடையாது. நேரில் சென்று கவனித்தால்தான் மனதில் நிம்மதி உண்டாகும். நீங்கள் உடன்வந்து ஆவன செய்தால் நலம்.

திரு.ஹா: (தனக்குள்) என் ஆரூயிர் நண்பருக்காக இந்த மானங் கெட்ட போக்கிரிகள் செய்யும் பைத்தியக்காரச் செயல்களை எல்லாம் பொறுத்துக் கொண்டிருக்கிறேன். இல்லாவிட்டால் இந்தக் கழுதைகளை இரவோடிரவாக ஏதேனும் அடித்துத் துரத்திவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன். (வெளிப்பட) சரி, வாருங்கள், போகலாம். (திரு. ஹார்ட்காசிலும் மார்லோவும் செல்லுகின்றனர்.)

ஹேஸ் (தனக்குள்) எப்படியோ இந்த ஒரு இரவைக் கழித்துத் தள்ளுவோம். இது என்ன விருந்தினர் விடுதியா அல்லது