பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 23

(24) ||. விநோத மாளிகையா? அராபிக்கதைகளில் அடிக்கடி காணப்படும் மாயக்குகை போலத் தோன்றுகிறது. உம்... எந்த நொடியில் எந்தப் பூதம் கிளம்புமோ?... ஆ, என்ன இது? என் கண்களே, உங்களை நான் நம்பலாமா? நான் காண்பது என்ன? என் கண்கள் காணுவது யாரை? (செல்வி நெவில் வருகிறாள்) என் நெவில் போலல்லவா தோன்றுகிறது. ஆம் நெவிலேதான்! (வியப்புடன் வெளிப்பட) நெவில், என் அருமை உயிரோவியமே, நீ எப்படி இங்கு வந்தாய்?

செ.நெ: நானும் அதே கேள்வியைத் திரும்பக் கேட்கலாம். ஹேஸ்டிங்ஸ்! ஆனால் உண்மையில் இது என் அத்தைவீடு. நான் அடிக்கடி கடிதங்களில் குறிப்பிடுவேனே, திருமதி ஹார்ட்காசில் என்று- அதுதான் என் அத்தை, என் அத்தை மகள் செல்வி கேட்டைத்தான் தங்கள் நண்பர் இப்போது நாடி வந்திருக்கிறார். இங்கே நாமும் எதிர்பாராது...

ஹேஸ்: என்ன நெவில், நீ கூறுவதெல்லாம் உண்மையா? உன்னை இங்கே கண்டதும், என் கண்களை நம்பாமல் திகைத்தேன். இப்போது என் காதுகளையும் என்னால் நம்ப முடியவில்லை. இது விடுதியல்லவா? இதைத் திரு.ஹார்ட்காசில் மனை என்கிறாயே பொருந்துமா?

செ.நெ: (புன்முறுவலுடன்) அருமை ஹேஸ்டிங்ஸ், இதை விடுதி யென்று உங்களிடம் யார் சொன்னார்கள்? சந்தேகமே வேண்டாம். இது திரு ஹார்ட்காசில் மாளிகையேதான்.

ஹேஸ்: ஆகா, அப்படியா செய்தி! அடுத்துள்ள விடுதியிலிருந்த ஒரு குறும்புக்கார இளைஞன் எங்களை இப்படி ஏமாற்றி இருக்கிறான். ஐயோ, விடுதிக்காரரென்று எண்ணித் திரு. ஹார்ட்காசிலை நானும் மார்லோவும் எப்படி எப்படி யெல்லாமோ நடத்தி, அவர் மனம் புண்படும்படி பேசிவிட்டோம். இப்படி எங்களை அந்தப் பயல் ஏன் ஏமாற்ற வேண்டும்?

செ.நெ: (பொங்கிவரும் சிரிப்பை. அடக்கிக் கொண்டு) அட பாவமே, இப்போதுதான் எனக்கும் உண்மை புரிகிறது. நீங்கள் டானியின் கையில் சிக்கிக் கொண்டுவிட்டீர்கள் போலும்! அவன் செல்வி கேட்டின் சின்னம்மா பிள்ளை; திருமதி, ஹார்ட் காசிலுக்குப் பிரியமான வளர்ப்புப் பிள்ளை. அவன் குறும்பு