பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

25

பெரிது; ஆனால் சூதுவாது தெரியாதவன், அவன் அம்மாவைப் பழிவாங்க இப்படியெல்லாம் செய்திருக்கிறான், கோமாளி!

ஹேஸ்: அம்மாவோடு அவனுக்கென்ன பகை?

செ.நெ: பகை ஒன்றும் பிரமாதமில்லை. அவளிடம் என் பெற்றோர்கள் வைத்துச் சென்ற அணிகள் இருக்கின்றன. அவள் டானியை என் காலில் கட்டி அதை இருவரிடமும் கொடுக்க எண்ணியிருக்கிறாள். இதனால் எங்களிருவருக்கும் ஓயாத தொல்லைகள்.டானிக்கும் அதன் காரணமாக அவள்மீது வெறுப்பு. ஆனால் எங்களிருவரிடையேயும் நட்பும் ஒற்றுமையும் மிகுதி.

ஹேஸ்: உங்களிடையே நட்பும் ஒற்றுமையுமா? தேனே, என்னிடம் வேறுமாதிரி எழுதியிருந்தாயே.

செ.நெ: அதற்குள் அவசரப்படுகிறீர்களே. எங்களுக்குள் நட்பும் ஒற்றுமையும் மிகுதிதான். ஏனென்றால் நான் அவனை வெறுக்கிறேன். அவனும் என்னை வெறுக்கிறான்! என்னை எவ்வளவு விரைவில் ஹேஸ் டிங்ஸ் என்ற இதயமற்ற கொலைகாரனிடம் ஒப்புவிக்க முடியுமோ, அவ்வளவு விரைவில் என் தொல்லை தீரும் என்று அவன் எண்ணுகிறான்.

ஹேஸ்: நெவில், என் காதற் களஞ்சியமே! நீ இப்போது என் குடும்பக் களஞ்சியமாகவும் இருக்கிறாய். சற்று நேரத்திற்குள் என்னை வாட்டிவதைத்துவிட்டாயே? சரி, அப்புறம்!

செ.நெ: இருவரும் ஓயாது சண்டைதான் பிடிக்கிறோம். ஆனால் பகை இல்லை; வெறுப்புத்தான் உண்டு. அது மட்டுமா? அத்தை முன்னிலையிலும் காதல் நாடகமாடி அவள் பேராசைக் கோட்டைக்கு ஒத்தூதிக் கொண்டு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்போது நீங்களும் இங்கே வந்து விட்டீர்கள். எப்படியாவது அத்தையை ஏமாற்றி நகைகளையெல்லாம் தட்டிப்பறித்துக் கொண்டு உங்களுடன் ஓடி வந்து விடுவதென்று முடிவு செய்திருக்கிறேன்.

ஹேஸ்: ஆரூயிரே, உன் திட்டம் கண்டு மகிழ்கிறேன். ஆனால், செல்வமும் வருவாயுமற்ற நிலையில் நீ திடீரென்று என்னுடன் வருவது சரியல்ல.

செ.நெ: அந்தக் கவலை தங்களுக்கெதற்கு? எனக்கு என் ஹேஸ்டிங்ஸ் மட்டுமே போதும். மற்ற செல்வங்கள் எதுவும்